பிரபல தனியார் தொலைக்காட்சியின் ஹிட் அடித்த ஷோக்களில் பிக்பாஸ் தவிர்க்க முடியாத மைல்கல். அது அந்த தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல அதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களும் பெரிய ஸ்டார் ஆவது ஆச்சரியத்திற்கில்லை.
தனக்கென ஒரு அடையாளம் வேண்டி சின்னத்திரை முதல் பெரியத்திரை வரை நடிகை, நடிகர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். இதுவரை மூன்று சீசன்களை ஒளிபரப்பியது. அதில் இறுதி சீசனில் கலந்து கொண்ட நடிகை வனிதா உடன் இருந்த பங்கேற்பாளர்களுக்கு டஃப் கொடுத்தவர்.
ஒரு சில படங்களில் நடித்த இவர் பல வருடங்களாக திரையில் தோன்றுவதையே தவிர்த்து வந்தார். பின் பலரும் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் பார்த்தனர். அதில் தன்னுடைய திடமான பேச்சு, தன்னம்பிக்கை, தைரியம், குறிப்பாக தனியாக வாழும் பெண்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணமாக இருந்தார்.
நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் நிகழ்ச்சி மூலம் மறக்க முடியாத பிரபலமாகிவிட்டார். இதை தொடர்ந்து தக்க வைக்க நினைத்த வனித அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இதுபோதாதென யூடியூபிலும் வனிதா விஜயகுமார் என்கிற பெயரில் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார்.
அவர் சமையலில் கைத்தேர்ந்தவர் என்பது பிக்பாஸிலேயே நிரூபித்தார். போதாதற்கு குக் வித் கோமாளியிலும் சிறந்த குக் ஆனார். இது பத்தாதென சமையலுக்கென்றே இந்த யூடியூப் சேனலை துவங்கியுள்ளார்.
மார்ச் 20 தேதி தொடங்கிய சேனல் தற்போது 2 லட்சம் பயனாளர்களைக் கடந்துள்ளது. தற்போது சமையல் மட்டுமன்றி பார்வையாளர்களை நகராமல் பார்த்துக்கொள்ள ஹோம் கிளீனிங், ஷாப்பிங் , டிப்ஸ் என சேனலையே சுவாரஸ்ய கோணத்தில் வீட்டுப்பெண்களுக்கு உதவும் வகையில் கொண்டு செல்கிறார்.
நீங்களும் சென்று பாருங்கள். லாக்டவுனில் சமைத்து அசத்த வனிதாவின் குக்கிங் டிப்ஸ் உங்களுக்கும் உதவலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.