• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சிக்கன் பிரியை வெண்பா.. வீட்டில் அடிக்கடி சமைக்கும் டிஷ் இதுதானாம்!

சிக்கன் பிரியை வெண்பா.. வீட்டில் அடிக்கடி சமைக்கும் டிஷ் இதுதானாம்!

மிகவும் பிடித்தமான ஃபரீனா தன்னுடைய வீட்டில் அடிக்கடி சமைக்கும் சிக்கன் ரெசிபியை பற்றி பார்க்கலாம்.

  • Share this:
    சின்னத்திரை வில்லிகள் லிஸ்டில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்ட பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு பிடித்த சிக்கன் ரெசிபி இதுதான்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரீனா. சின்னத்திரை டாப் லிஸ்ட் வில்லிகளில் முதலிடத்தில் இருப்பவரும் ஃபரீனா தான். சொல்லப்போனால் சின்னத்திரையில் யங் வில்லியும் இவரே. பாரதி கண்ணம்மா சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் திட்டு வாங்கினாலும் இந்த ரோலில் வெண்பாவின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்யும் திறன் கொண்டவர். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஃபரீனா புதுயுகம் டிவியில் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    அதே போல் ஜி தமிழில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். எப்போதுமே ஃபரீனாவுக்கு உணவு என்றால் அவ்வளவு பிடிக்குமாம். இதுப்போன்ற உணவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதாl பல டிஷ்களை சமைக்கவும் கற்றுக் கொண்டாராம். அதன் பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சமையலில் நாட்டம் செல்லவில்லையாம். சிக்கன் பிரியையான இவர் அடிக்கடி சிக்கன் உணவுகளை எடுத்துக் கொள்வாராம். எனவே, இந்த தொகுப்பில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஃபரீனா தன்னுடைய வீட்டில் அடிக்கடி சமைக்கும் சிக்கன் ரெசிபியை பற்றி பார்க்கலாம்.



    இதை செய்வதும் மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் நல்ல டேஸ்டியான சிக்கன் ரெசிபியை சுவைக்க நினைப்பவர்கள் இந்த டிஷ்ஷை உங்கள் வீடுகளிலும் ட்ரை செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் என்றால் சிக்கன், வெங்காயம், கறிவேப்பிலை, பெப்பர் தூள், இஞ்சி பூண்டு விழுது. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் சிக்கன் சேர்த்து உப்பு, பெப்பர் தூள் தூவி எண்ணெய்யில் அப்படியே வறுக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரியும் வரை சிக்கனை கடாயில் வறுத்து எடுத்து இறக்கினால் சுவையான குயிக்கான சிக்கன் டிஷ் ரெடி. இதை சாம்பார் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்குமாம். ஃபரீனாவும் அடிக்கடி இந்த உணவை விரும்பி சாப்பிடுவாராம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: