ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இருமல், சளி தொல்லையா? அப்போ இந்த சட்னியை கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க..!

இருமல், சளி தொல்லையா? அப்போ இந்த சட்னியை கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க..!

வெற்றிலையில் சட்னி

வெற்றிலையில் சட்னி

betel Leaves | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வெற்றிலை சட்னியை சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலையை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஜீரணம் ஆகாத சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். இப்பொழுது நாம் சளித்தொல்லை, கால்சியம் சத்து, ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில்  தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை - 5

மிளகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

பூண்டு - 2 பல்

மிளகாய் - 4

பொரிகடலை - 3 ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2ஸ்பூன்

புளி -  1 துண்டு

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுந்து - 1/4 ஸ்பூன்

செய்முறை

1. வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும்.

2. பின்னர் மிக்ஸியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரி கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்

3.  பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கொள்ளவும். வெற்றிலை சட்னி ரெடி.

First published:

Tags: Betel leaves, Chutney