கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போனது என்றாலும் . ஜீரணம் ஆகாது சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
வெற்றிலை - 5
மிளகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகாய் - 4
பொரிகடலை - 3ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - 2ஸ்பூன்
புளி - 1துண்டு
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1/4ஸ்பூன்
செய்முறை
வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கொள்ளவும். வெற்றிலை சட்னி தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.