ஆரோக்கியமான, அழகான நீள கூந்தலுக்கு நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் மட்டும் போதுமானதா? இல்லை. நல்ல உணவு பழக்கமும் மிகவும் முக்கியம். சத்தான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடலுக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் வலு சேர்க்கிறது. கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
சியா விதைகள்:
முடி வளர்ச்சியைத் தூண்டவும், ஸ்கேல்ப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும் நல்ல கொழுப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால், நம் உடலால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. சியா விதைகள் நம் உடலுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை நிரப்புவது மட்டுமல்லாமல் வைட்டமின் ஈ துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றையும் வழங்குகிறது.
முட்டை:
முட்டையில் அதிகளவில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, டி, பி12 போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளதால் அதிலிருந்து நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கும் கூந்தலுக்கும் பெரும் நன்மை பயக்கும். நம் மயிர்க்கால்கள் புரதத்தால் நிறைந்தவை என்பதால், டயட்டில் தினமும் குறிப்பிடத்தக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு அவசியம்.
கீரை வகைகள்:
பச்சைக் காய்கறிகள்… குறிப்பாக கீரை வகைகள் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றுகின்றன. கீரையில் இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் உள்ளதால் உடலுக்கும் அதீத பயன்களை தருகின்றன. மேலும், கீரையில் அதிகளவு மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் அவை கூந்தலில் சீபம் (sebum) உற்பத்தி செய்து ஊட்டச்சத்துடன் இருக்க உதவுகின்றது.
வெந்தயம்:
தலைமுடி பிரச்சனைகளுடன் தினமும் போராடி, பொடுகை போக்க விரும்பினால் வெந்தய விதைகளை விட ஒரு சிறந்த வழி இல்லை. அவை ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை மற்றும் கூந்தல் உடையக்கூடிய அபாயத்தைக் குறைத்து சேதத்தை குணப்படுத்துவதன் மூலம் வலுவான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பெர்ரீஸ்:
சூப்பர் ஃபுட் எனப்படும் பெர்ரீக்களில் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வகைகள் அதிகளவில் உள்ளன. மயிர்க்கால்களை வலுவாக்கி பாதுகாக்க உதவும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் சக்தி பெர்ரீக்களுக்கு உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair fall, Hair loss, Healthy Food, Healthy Life