ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்... இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணி பாருங்க!

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்... இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணி பாருங்க!

முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும், குறைவான கலோரிகளும் கொண்டதாகும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் தோராயமாக 15 கலோரிகள் மட்டுமே உள்ளன.

முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும், குறைவான கலோரிகளும் கொண்டதாகும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் தோராயமாக 15 கலோரிகள் மட்டுமே உள்ளன.

முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும், குறைவான கலோரிகளும் கொண்டதாகும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் தோராயமாக 15 கலோரிகள் மட்டுமே உள்ளன.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைப்பதற்காக வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை வியர்க்க விறுவிறுக்க செய்தால் மட்டும் போதாது, நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவையும், என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றை திருப்தியாக வைத்திருக்கக்கூடிய குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகள் உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் உதவுகின்றன.

அந்த வகையில் பார்த்தால் காலை, மாலை, இரவு என மூன்றுவேளைக்கும் ஏற்ற உணவாக முட்டையின் வெள்ளைக்கரு பரிந்துரைக்கப்படுகிறது. முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும், குறைவான கலோரிகளும் கொண்டதாகும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் தோராயமாக 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவை விட முழு முட்டையும் ஆரோக்கியமானது தான் என்றாலும், வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவுகின்றன. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது நமது சருமம் மற்றும் கூந்தலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் தர உதவுகிறது.இன்று வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்களுக்காக சில ஸ்பெஷல் ரெசிபிகளை முட்டையின் வெள்ளைக்கருவை வைத்து செய்வது எப்படி என பார்க்கலாம்...

1. எக் ஒயிட் ஆம்லெட்:

முட்டையின் மஞ்சள் கருவில் வெள்ளைக்கருவை விட அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருந்தாலும், வெள்ளைக்கருவில் அதிக அளவிலான புரதம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க சிறப்பானது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வழக்கமான முட்டை ஆம்லெட்டிற்கு பதிலாக வெள்ளைக்கருவை மட்டுமே கொண்டு ஆம்லெட் செய்வது எப்படி என பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

எண்ணெய் - 1 டீஸ்பூன்

நறுக்கப்பட்ட வெங்காயம் - 1/2 கப்

நறுக்கப்பட்ட குடைமிளகாய் - 1/4 கப்

நறுக்கப்பட்ட காளான் - 1/4 கப்

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளையும் உடைத்து, வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிதளவு எண்ணெய் விடவும். அதில் பொடியாக நறுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடைமிளகாய், காளான் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தற்போது இந்த கலவையை வெள்ளைக்கரு உள்ள பாத்திரத்தில் சேர்த்து, அத்துடன் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் போட்டு கலக்கவும். தற்போது மீதமுள்ள எண்ணெய்யை தவாவில் நன்றாக தடவி, கலந்து வைத்துள்ள வெள்ளைக்கரு ஆம்லெட் கலவையை ஊற்றவும். இருபுறம் நன்றாக வேகவைத்து, சுடச்சுட பரிமாறலாம். வழக்கமான ஆம்லெட்டை போலவே இதுவும் சுவையாக இருக்கும்.

2. கிளாசிக் எக் ஒயிட் ஸ்க்ரம்பிள்:

வழக்கமாக ஒட்டுமொத்த முட்டையையும் தவாவில் உடைத்து ஊற்றி, அதனை கிளறி விட்டு ஸ்க்ரம்பிள்ட் எக் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். தற்போது அதேபாணியில் வெயிட் லாஸ் பிரியர்களுக்கான கிளாசிக் எக் ஒயிட் ஸ்க்ரம்பிள் செய்து பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

பால் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். இப்போது தவாவில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும். அதன் பின்னர் நன்றாக அடித்து வைத்துள்ள வெள்ளைக்கரு கலவையை தவாவில் ஊற்றவும். அது லேசாக வெந்தவுடனேயே மரக்கரண்டி அல்லது ஸ்பேட்டூலா கொண்டு கிளறி விட வேண்டும். முட்டைகள் நன்றாக வெந்து தூள் தூளாக பிரிந்து வரும் வரை நன்றாக கிளறிவிடவும். இப்போது சுவையான கிளாசிக் எக் ஒயிட் ஸ்க்ரம்பிள் பரிமாற தயார்.

3. வேகவைத்த முட்டை வெள்ளைக்கரு சாட்:

முட்டையை வைத்து பல வகையான சாட் வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் சுவையுடன் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கக்கூடிய இந்த சாட் வகையை ஒருமுறை ருசித்துப்பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டைகள் - 3

தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்

தக்காளி சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

புளி சாறு - 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வறுத்த சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

உப்பு - ருசிக்கு ஏற்ப

சாட் மசாலா - சிறிதளவு

நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

ஒரு தட்டில் வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி, வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளவு. இப்போது ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் தக்காளி கெட்சப், 1 டீஸ்பூன் தக்காளி சில்லி சாஸ், புளி சாறு 3 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், வறுத்த சீரகம் 1 டீஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். புளிப்பு சுவை மிக்க இந்த சட்னியை இப்போது முட்டையின் உட்புறத்தில் நிரப்பவும். அதன் மீது அலங்காரத்திற்காக சாட் மசாலா மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறுங்கள்.

4. எக் ஒயிட் ஓட்மீல்:

வெயிட் லாஸுக்கு உதவும் ஓட்ஸ் உடன் வெள்ளைக்கருவையும் சேர்த்து புதுமையான பிரேக் பஸ்ட்டை என்ஜாய் செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 கப்

வாழைப்பழ துண்டுகள் - 1/2 கப்

பால் - 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

இலவங்க பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு - 1/4 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், வாழைப்பழ துண்டுகள், இலவங்க பட்டை தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இப்போது அந்த கலவையில் அரை கப் பால் மற்றும் தண்ணீரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை மிதமான தீயில் வைத்து 6 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்கவும். இந்த கலவை எளிதில் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளக்கூடும் என்பதால்,தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இத்துடன் எடுத்துவைத்துள்ள கால் கப் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் பஞ்சு போன்ற மென்மையான கலவை கிடைக்கும். முட்டையின் வாசனை நன்றாக சென்ற பிறகு, சமைக்கப்பட்ட ஓட்மீல் மீது பீனட் பட்டர், கிரானோலா, வாழைப்பழங்கள், உறைந்த ராஸ்பெர்ரி போன்ற உங்களுக்கு பிடித்த டாப்பிங்ஸைச் சேர்த்து சாப்பிடலாம்.

5. எக் ஒயிட் கிரிப்ஸ்:

ஃபேன் கேக் போன்ற மெல்லிய வடிவிலான கிரிப்ஸ் மேலை நாடுகளில் பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும் காலை உணவு ஆகும். பெர்ரி வகைகள், வெண்ணெய், க்ரீம் போன்றவற்றுடன் இவை பரிமாறப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்

முட்டையின் வெள்ளைக்கரு - 2

கொழுப்பு நீக்கிய பால் - 1/2 கப்

வெஜிடபிள் ஆயில் - 1 டீஸ்பூன்

பெர்ரி வகைகள் - 1/2 கப்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு பவுலில் கோதுமை மாவு, முட்டையின் வெள்ளைக்கரு, கொழுப்பு நீக்கப்பட்ட பால், வெஜிடபிள் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவான மாவாக கலந்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு நான் ஸ்டிக் பேனை சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக தோசைப் போல் வார்க்கவும். மாவு கலவை கீழ்புறத்தில் நன்றாக பொன்னிறமாக மாறியதும், அதன் நடுவில் 2 டீஸ்பூன் அளவிற்கு கலந்த பெர்ரி வகைகளை வைக்கவும். மேலும் 2 நிமிடத்திற்கு இதனை வேகவைத்து க்ரீப்பை பாதியாக மடித்து எடுத்து, பரிமாறவும்.

அனைவரும் தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக உடல் உழைப்பின்றி கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதே போதுமானது ஆகும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Egg, Egg recipes, Weight loss