Home /News /lifestyle /

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த இந்த 3 கேக்குகள் செய்து பாருங்கள்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த இந்த 3 கேக்குகள் செய்து பாருங்கள்!

கிறிஸ்துமஸ் கேக்

கிறிஸ்துமஸ் கேக்

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு விதமான கேக்குகள் மற்றும் மேலும் பல இனிப்புகள் தான் நினைவுக்கு வரும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒருவிதமான உற்சாகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட கூடும். ஒவ்வொரு ஆண்டும் இறுதி நாட்களில் உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு விதமான கேக்குகள் மற்றும் மேலும் பல இனிப்புகள் தான் நினைவுக்கு வரும். இந்த கிறிஸ்துமஸிற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் மகிழ்விக்க கூடிய சில புதுவித கேக்குகளை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதவில் விரிவாக பார்ப்போம்.

ஸ்ட்ராபெரி ஸ்பான்ஜ் கேக் :

தேவையான பொருட்கள் :

40 கிராம் - வெண்ணெய்,
2 - முட்டை,
45 கிராம் - சர்க்கரை,
35 கிராம் - பாதாம் பவ்டர்,
15 கிராம் - மைதா மாவு,
ஒரு சிட்டிகை - உப்பு,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,
¼ தேக்கரண்டி - ஸ்ட்ராபெரி ஃபிளேவர்,
¼ தேக்கரண்டி - ராஸ்பெர்ரி சிவப்பு ஃபூட் கலர்.



செய்முறை :

முதலில் மைக்ரோவேவ் கண்ணாடி கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் 40 கிராம் வெண்ணெய்யை சேர்த்து 375W வெப்பத்தில் 1 நிமிடம் வரை வைத்து தனியாக உருக்கி எடுத்து கொள்ளவும். பிறகு வேறொரு கண்ணாடி கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, 45 கிராம் சர்க்கரையை சேர்த்து நுரை போன்று ஆகும் வரை நன்றாக அடித்து கொள்ளவும்.

அடுத்து, இதில் 15 கிராம் மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா மாவு, 40 கிராம் உருகிய நெய் சேர்க்கவும். பிறகு ¼ தேக்கரண்டி ஸ்ட்ராபெரி ஃபிளேவர் மற்றும் ராஸ்பெர்ரி சிவப்பு ஃபூட் கலர் இதில் சேர்த்து கொண்டு நன்றாக கலக்கவும். இந்த கலவையை கேக் மோல்டில் ஊற்றி மைரோவேவில் 375W-இல் 4 நிமிடங்கள் வைத்து எடுத்து கொண்டு, அதில் துண்டு துண்டாக வெட்டிய ஸ்ட்ராபெரியை மேற்பகுதியில் சேர்த்து எல்லோருக்கும் பரிமாறலாம்.

கேரட் கேக் :

ஆரோக்கியம் அதிகம் நிறைந்த இந்த கேரட் கேக்கை தயார் செய்ய தேவையான பொருட்கள் :

50 கிராம் - கேரட்,
40 மில்லி - எண்ணெய்,
30 கிராம் - பிரவுன் சர்க்கரை,
2 - முட்டைகள்,
25 கிராம் - வால்நட்,
60 கிராம் - மைதா மாவு,
1 டீஸ்பூன் - இலவங்கப்பட்டை தூள்,
¼ தேக்கரண்டி - பேக்கிங் பவுடர்,
¼ தேக்கரண்டி - சமையல் சோடா,
¼ தேக்கரண்டி - வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.



செய்முறை :

முதலில் 50 கிராம் கேரட்டை 375W வெப்பத்தில் 1 நிமிடம் வரை வைத்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, 30 கிராம் சர்க்கரையை சேர்த்து நுரை போன்று வரும்வரை அடித்து கொள்ளவும். பிறகு இதில் 40 மில்லி எண்ணெய்யை ஊற்றி கலந்து கொள்ளவும்.

இந்த கலவையில் 60 கிராம் மைதா மாவு, ¼ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ¼ தேக்கரண்டி சமையல் சோடா, 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், 25 கிராம் வால்நட் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பிறகு வேகவைத்த கேரட், ¼ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு 300W வெப்பத்தில் 3 நிமிடம் மைக்ரோவிவில் எடுத்து கொள்ளவும். இறுதியில் இதன் மேற்பகுதியில் உங்களுக்கு பிடித்தது போன்று அலங்கரித்து பரிமாறுங்கள்.

Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா?

கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக் :

மிக அருமையான சுவைகொண்ட இந்த கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக்கை தயார் செய்ய கீழுள்ள பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்.

லைட் பிரவுன் சர்க்கரை - 200 கிராம்
தண்ணீர் - 240 மிலி/கிராம்
வெண்ணெய், துண்டுகளாக்கப்பட்டது - 55 கிராம்
பொடித்த இலவங்கப்பட்டை - 1 தேக்கரண்டி
பொடித்த கிராம்பு - 1/4 - 1/2 தேக்கரண்டி
பொடித்த இஞ்சி - 1 தேக்கரண்டி
தூள் உப்பு - 1/2 தேக்கரண்டி (2 கிராம்)
உலர்ந்த திராட்சை - 300 கிராம்
முட்டை - லேசாக அடித்தது, 2 பெரியது (100 கிராம்)
மாவு - 1 1/2 கப் (195 கிராம்)
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி (4 கிராம்)
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி (4 கிராம்)
ஆரஞ்சு பழம் அல்லது எலுமிச்சை தோல் நறுக்கியது - 1 கப் (150 கிராம்)



செய்முறை :

பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் சர்க்கரை, தண்ணீர், வெண்ணை, பொடித்த மசாலா பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றை சேர்த்து கொண்டு 5 நிமிடம் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும். பிறகு இதை வெளியில் எடுத்து வைத்து உலர விட செய்யுங்கள். இதற்கிடையில், மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்ஸியஷில் பிரீஹீட் செய்து கொள்ளவும். அடுத்து 8 1/2 x 4 1/2 x 3 இன்ச் (21.5 x 11.5 x 10 cm) லோஃப் பேனில் வெண்ணெய்யை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.

பிறகு அந்த பேனின் அடிப்பகுதியில் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து லேசாக வெண்ணெய்யை தடவி கொள்ளுங்கள். கொதிக்க வைத்த அந்த கலவை ஆறிய பிறகு, அதில் அடித்த முட்டை, மைதா மாவு, பேக்கிங் சோடா, வெனிலா எசன்ஸ், நறுக்கிய ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொண்டு வெண்ணெய் தடவிய பேனில் ஊற்றி கொள்ளுங்கள். இதை 55-65 நிமிடங்கள் வரை பேக்கிங் செய்யவும். கேக் சரியாக தயாராகி உள்ளதா என்பதை அறிய பல் குத்தும் குச்சியை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். வெந்த பின் இதை 15 நிமிடங்கள் உலர விட்டு அழகான முறையில் அலங்கரித்து எல்லோருக்கும் பரிமாறலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cake, Christmas

அடுத்த செய்தி