Home /News /lifestyle /

ஸ்வீட் கடைகளிலும் காலாவதி தேதி அவசியம்: உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!

ஸ்வீட் கடைகளிலும் காலாவதி தேதி அவசியம்: உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!

ஸ்வீட் கடைகளிலும் காலாவதி தேதி அவசியம்

ஸ்வீட் கடைகளிலும் காலாவதி தேதி அவசியம்

ஸ்வீட் கடைகளில் காலாவதி தேதி தெரியாமல் திண்பண்டங்கள் வாங்குவதால் பல நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியத்திற்கு கேடு விளைக்கின்றன.

  • News18
  • Last Updated :
    ஸ்வீட் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட்டுகளுக்கும் காலாவதி தேதி அவசியம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜூன் 1 தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஸ்வீட் கடைகளில் தேவைக்கு ஏற்ப கிலோ கணக்கில் வாங்கிகொள்ள ஏதுவாக கண்ணாடிப் பெட்டிக்குள் பார்வைக்கு ஸ்வீட்டுகள் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்த ஸ்வீட்டுகள் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. சிலர் விற்பனையாளரிடமே ஃபிரெஷாக செய்ததா என கேட்டு வாங்குவார்கள்.



    இந்நிலையில் இவ்வாறு விற்பனை செய்வதால் அது எப்போது தயாரிக்கப்பட்டது. அதன் காலாவதி தேதி என்ன என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி காலாவதி தேதியை எழுதி ஒட்ட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளது. இதை அந்தக் கடை உரிமையாளரே எழுதி ஒட்டலாம் என்று கூறியுள்ளது.

    ஸ்வீட் கடைகளில் காலாவதி தேதி தெரியாமல் திண்பண்டங்கள் வாங்குவதால் பல நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியத்திற்கு கேடு விளைக்கின்றன என பலரிடமிருந்து புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்தக் கடை உரிமையாளரே அந்த பொருளின் தரம் மற்றும் அதன் உற்பத்தி நாளைக் கணக்கிட்டு அதன் காலாவதி தேதியை நிர்ணயித்து ஒட்ட வேண்டும் கண்ணாடி பெட்டி மட்டுமல்லாது கண்ணாடி பெட்டிக்கு மேலே ட்ரேக்களில் வைக்கப்படும் திண்பண்டங்கள், ஸ்வீட்ஸுகளுக்கும் காலாவதி தேதியை நிர்ணயித்து ஒட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி