வழக்கமான இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல் போன்ற ரெகுலர் பிரேக் பாஸ்ட்களுக்குப் பதிலாக ஸ்பெஷலாக எதையாவது செய்து கொடுத்த குடும்பத்தினரை அசத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரேக் பாஸ்ட் மெனுவை முயற்சித்து பாருங்கள்.
பெர்ரி பிரேக் ஃபாஸ்ட் டார்ட் உண்மையிலேயே சுவையானது மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய ஒரு அசத்தலான காலை உணவாகவும் இருக்கும், அவர்களுக்கும் இதை மிகவும் பிடிக்கும். பொடி செய்யப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், முழு கோதுமை மாவு, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையாக இதை தயார் செய்யலாம்.
பெர்ரி பிரேக்ஃபாஸ்ட் டார்ட்டின் செய்ய தேவையான பொருட்கள்:
பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - 1 1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்
ஃபில்லிங்:
ஸ்ட்ராபெரி ஜாம் - 3 தேக்கரண்டி
மியூஸ்லி - 3 தேக்கரண்டி
மாவு தயாரிக்க:
வெண்ணெய் - 1/4 கப்
சர்க்கரை பவுடர் - 2 தேக்கரண்டி
கோதுமை மாவு - 1/2 கப்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
தேவைக்கேற்ப தண்ணீர்
அலங்காரத்திற்கு தேவையானவை:
தயிர் - 4 தேக்கரண்டி
புதினா இலைகள் - தேவையான அளவு
டாப்பிங்ஸுக்கு தேவையானவை:
நறுக்கப்பட்ட ஸ்ட்ராபெரி - 6
புளுபெர்ரி - 1/2 கப்
தேன் - 1 தேக்கரண்டி
சர்க்கரை பவுடர் - 4 தேக்கரண்டி
also read :உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் மசாலா ஃபிரை செய்வது எப்படி?
செய்முறை :
1. மாவை தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெண்ணெய், சர்க்கரை பவுடர், சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்து மாவாக பிசையவும். இந்த மாவை 10 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவிடவும்.
2. 10 நிமிடங்களுக்குப் பிறகு பலகை மீது மாவை தூவி பிசைந்து வைத்திருக்கும் மாவை போட்டு ரொட்டிகளாக தேய்த்து வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
3. ஃபில்லிங்கை தயாரிக்க, ஒரு கிண்ணத்தில் ஸ்ட்ராபெர்ரி ஜாம், மியூஸ்லியை ஒன்றாக சேர்த்து கலவையாக தயாரித்துக் கொள்ளவும்.
4. பூ வடிவில் இருக்கும் கேக் அச்சிற்கு வெண்ணெய் பூசி தயார் செய்யவும். பின்னர் அதனுள் சிறிதளவு மாவை தூவிக்கொள்ளவும். அதனுள் தயார் செய்யப்பட்ட வட்ட வடிவ ரொட்டியை முதலில் வையுங்கள். ஒரு முட்கரண்டியின் உதவியுடன், தாளை லேசாக குத்தி, அதில் மியூஸ்லி மற்றும் ஜாம் நிரப்புதலைச் சேர்க்கவும்
also read : இந்த ரம்ஜானில் மிஸ் பண்ணவே கூடாத 5 மட்டன் பிரியாணி வகைகள்..!
5. அவனை 180 டிகிரி செல்சியஸில் முன்கூட்டியே சூடாக்கி, தயார் செய்துள்ள அச்சை அதனுள் வைத்து சுமார் 12 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
6. பெர்ரி டாப்பிங் தயாரிக்க, ஸ்ட்ராபெர்ரிகளை நறுக்கவும். ஒரு பாத்திரத்தில், தேன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, சர்க்கரை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
7. பேக்கிங் முடிந்தவுடன், பூ வடிவ அச்சில் இருந்து அதனை வெளியே எடுக்கவும், அதை தட்டில் வைத்து, அதன் மேல் பெர்ரி டாப்பிங்கை வைக்கவும்.
8. அதன் மீது சர்க்கரை பவுடர், தயிர், நறுக்கிவைக்கப்பட்ட பெர்ரி மற்றும் புதினா இலைகளை வைத்து அலங்கரித்தால், சுவையான பெர்ரி பிரேக்ஃபாஸ்ட் டார்ட்டின் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.