Home /News /lifestyle /

முடி உதிர்வை தடுக்க.. சர்மம் பளபளக்க கண்டிப்பாக இந்த Vitamin சத்து வேண்டும்!

முடி உதிர்வை தடுக்க.. சர்மம் பளபளக்க கண்டிப்பாக இந்த Vitamin சத்து வேண்டும்!

வைட்டமின் ஈ நலன்கள்.

வைட்டமின் ஈ நலன்கள்.

புற ஊதாக்கதிர்கள், தூசு மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுக்காக்கவும், தோலின் நெகிழ்வு தன்மை, வயதான தோற்றம் ஆகியவற்றை சரி செய்யவும் இந்த வைட்டமின் உதவுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலுக்கு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. நமது உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதிலும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் E சத்தை சரியான அளவு கொண்டுள்ள உடலானது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட வலிமையாக இருக்கும். தோல், தலைமுடிக்கு முக்கியமான ஊட்டச்சத்தான வைட்டமின் ஈ உச்சி முதல் பாதம் வரை மனிதனை பாதுகாக்க உதவுகிறது.

    புற ஊதாக்கதிர்கள், தூசு மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுக்காக்கவும், தோலின் நெகிழ்வு தன்மை, வயதான தோற்றம் ஆகியவற்றை சரி செய்யவும் உதவுகிறது. வைட்டமின் கே, பி, சி, என பலவகையான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், வைட்டமின் ஈ ஏன் மனித உடலுக்குத் தேவையான முக்கிய சத்தாக பார்க்கப்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் அளித்துள்ள விளக்கம் பற்றி அறிந்து கொள்ளலாம்...

    1. சருமத்துக்கான நன்மைகள்:

    உடலை அரணாக காக்கும் தோலை பாதுகாக்கும் கவசமாக வைட்டமின் ஈ உள்ளது. வைட்டமின் ஈ சத்து புற ஊதாக்கதிர்கள் போன்ற தாக்குதலில் இருந்து தோலை பாதுகாப்பதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது இயற்கையான குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதால், வைட்டமின் ஈ காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. வைட்டமின் ஈ, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க கூடியது என்பதால், சரும பளபளப்பைக் கூட்ட உதவுகிறது. வயதான தோற்றத்தை தடுப்பதற்காகவும், சரும பொலிவை கூட்டவும், அழகு சாதன பொருட்களில் வைட்டமின் ஈ பயன்படுத்தப்படுகிறது.

    2. தலைமுடிக்கான நன்மைகள்:

    வைட்டமின் ஈ, உச்சந்தலையில் ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியும் அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ சத்து கூந்தலின் அளவை அதிகரிக்க மட்டுமல்ல, சேதத்தைக் குறைக்கவும், பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரி செய்யவும் பயன்படுவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
    வைட்டமின் ஈ-யில் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளதால், முடியின் மேற்புறத்தை பளபளப்புடன் வைக்க உதவுகிறது.

    வைட்டமின் ஈ பொதுவான நன்மைகள்:

    வைட்டமின் ஈ குறைபாடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும். வைட்டமின் ஈ பல இருதய நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இரத்தப்போக்கு மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. அதேபோல் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறையும் போது, வைட்டமின் ஈ சத்து புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. வைட்டமின் ஈ கண்புரை அபாயத்தை குறைக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை தரக்கூடிய வைட்டமின் ஈ, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், நோய்களை எதிர்த்துப் போராடவும், தோல் மற்றும் முடியை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான ஆரோக்கிய பலன்களைக் கொடுக்க கூடிய முக்கிய வைட்டமின் ஆக உள்ளது.

    வைட்டமின் ஈ பயன்பாடு சருமத்தில் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. வைட்டமின் ஈ-யின் நன்மைகள் பற்றி அறிந்ததால் தான் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் இந்த சத்து கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Hair loss, Vitamin e

    அடுத்த செய்தி