முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தர்பூசணி சாப்பிட்டால் விதைகளை குப்பையில் போடுறீங்களா..? இனி அப்படி செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா..?

தர்பூசணி சாப்பிட்டால் விதைகளை குப்பையில் போடுறீங்களா..? இனி அப்படி செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா..?

தர்பூசணி விதை

தர்பூசணி விதை

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.

  • Last Updated :

கோடைக்காலம் தொடங்கினாலே மூலை முடுக்குகள் எங்கும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிரிக்க தர்பூசணியின் தேவையை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை ஊர் பக்கங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள்.

உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவோம். அப்படியே தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டாலும் வயிற்றுக்குள் செடி வளரும் என 90ஸ் கிட் பரிதாபங்கள் வேறு..! ஆனால் உண்மையில் அது பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியது என்பது தெரியுமா..?

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இந்த ஒட்டுமொத்த மினரல் சத்துக்களின் ஆற்றல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது. தர்பூசணி சாப்பிட்டதும் அது வெளியிடும் ஆசிட் உடலின் செயல்பாடுகளை சீராக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

தர்பூசணி விதைகளை வெயிலி காய வைத்து வறுத்து சாப்பிடலாம். தர்பூசனி விதைகளில் பர்பி செய்யலாம். வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். பொடியாக்கி சாப்பிடலாம். விதைகளை அரைத்து watermelon seed shake, whatemelon seed butter செய்து சாப்பிடலாம்.

ரொட்டி மாவுக்கும், மைதா மாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

top videos

    தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும். தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    First published:

    Tags: Watermelon