ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Turmeric : மஞ்சளின் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Turmeric : மஞ்சளின் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மஞ்சள் பொடி

மஞ்சள் பொடி

turmeric | மஞ்சள் கிருமி நாசினி என்பது மட்டுமின்றி அன்றாட சமையலில் மஞ்சள் சேர்ப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதுகுறித்து இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. அவை, முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று  மஞ்சள் கிருமி நாசினி என்பது மட்டுமின்றி அன்றாட சமையலில் மஞ்சள் சேர்ப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதுகுறித்து இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம்.

  1. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் வரும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட மஞ்சள் உதவுகிறது. எனவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உங்கள் உணவு பட்டியலில் மஞ்சள் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்...

  2. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியைத் தணிக்கவும், கொழுப்பு எரிப்பதில் சிறப்பாகவும் செயல்படுகிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

  3. கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ளலாம். கீல்வாதம் என்பது ரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கின்ற ஒரு நோயாகும். மஞ்சள் இயற்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுகளில் வலி, விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே இதை சேர்த்துக் கொண்டால் நல்லது...

  4. மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம் உடலில் சுரக்கும் சிலவகை ஹார்மோன்களே காரணம். அவை டோபமைன் (Dopamine), மற்றும் செரட்டோனின் (Serotonin) ஆகும். இவை ஆங்கிலத்தில் 'ஹேப்பி ஹார்மோன்' என அழைக்கப்படுகிறது. மஞ்சள் இந்த ஹார்மோன்களை தூண்ட உதவுகிறது. இதன் விளைவாக மனச்சோர்வால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிடலாம்.

  மேலும் படிக்க... Turmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்!

  5. மஞ்சள் இரத்தச் சர்க்கரை குறைக்கும் முகவராக செயல்படுகிறது. இதனால் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சளை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

  6. மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

  7.  எரிச்சலூட்டும் நோய்க்குறி உள்ளவர்கள் வயிற்று அசகரியத்தைத் தணிக்க மஞ்சள் உட்கொள்ளலாம். இது பெருங்குடல் அழற்சி பிரச்சனையை குணமாக்கும்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Turmeric