முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பிணிகள் கவனத்திற்கு... சூரியகாந்தி விதைகளின் 5 நன்மைகள்!

கர்ப்பிணிகள் கவனத்திற்கு... சூரியகாந்தி விதைகளின் 5 நன்மைகள்!

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் என்பதால், அவற்றின் மூலதனமாக இருக்கும் சூரியகாந்தி விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் என்பதால், அவற்றின் மூலதனமாக இருக்கும் சூரியகாந்தி விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் என்பதால், அவற்றின் மூலதனமாக இருக்கும் சூரியகாந்தி விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  • Last Updated :

சூரியகாந்தி விதைகள் சத்தானவையாகவும், உலகின் பல்வேறு மூலைகளிலும் மிகவும் சுவையான சிற்றுண்டியாகவும் உள்ளது. சூரியகாந்தி விதைகள் சிறியதாக தோன்றினாலும், இவை ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. குறிப்பாக, தாய்மை அடையவுள்ள பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில் தாராளமாக சாப்பிடலாம். பிறக்கப்போகும் குழந்தையின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு தாயாக உங்களுக்கு இருக்கிறது என்பதால், அதனைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணிகள் சூரியகாந்தி விதைகளை சாப்படுவதால் கிடைக்கும் நன்மைகள்:

சூரியகாந்தி விதைகளில் 90 விழுக்காடு வைட்டமின்கள், பைட்டோ கெமிக்கல்கள், புரதம், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இந்த விதைகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்கள் உடலை பாதுகாக்கிறது. ரத்தநாளங்களில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்கும். சூரியகாந்தி விதைகளில் காணப்படும் பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள், பிறக்கப்போகும் குழந்தையின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் இருக்கும் உயர்தர பொட்டாசியத்தின் அளவு, உடலில் இருக்கும் சோடியத்தின் அளவை சீராக்குகிறது. பைட்டோ கெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதுடன், வளர்ந்து வரும் கருவை தாங்கும் ஆற்றலையும் கொடுக்க உதவுகிறது.

ஃபோலிக் ஆசிட்:

ஃபோலேட், இரும்பு, கால்சியம், துத்தநாகம், செலினியம் மற்றும் தாமிரம் போன்ற பல்வேறு தாதுக்களின் வளமான மூலமாக சூரியகாந்தி விதைகள் இருக்கின்றன. இந்த விதைகளில் இருக்கும் ஃபோலிக் அமிலம், நுரையீரலில் இருந்து உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் என்பதால், அவற்றின் மூலதனமாக இருக்கும் சூரியகாந்தி விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியின்மையை தடுக்க ஃபோலிக் அமிலம் பெரிதும் உதவுகிறது.

சூரியகாந்தி விதைகள் ரெசிபி:

சூரியகாந்தி விதைகளை பல்வேறு வகையில் சமைத்து அன்றாட உணவாக சாப்பிடலாம். சிறிதளவு உப்பிட்டு அல்லது வெறும் விதைகளை கடாயில் போட்டு வறுத்து சாப்பிடலாம். சில சாலட்களுக்கு இடையில் சூரியகாந்தி விதைகளை வைத்து சாப்பிடலாம். அவை கடித்து சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். வறுத்த சூரியகாந்தி விதைகளை கேக், சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவற்றுடன் சேர்த்து, உங்கள் உணவில் மேலும் சுவையைக் கூட்டலாம். இந்த விதைகளை நன்கு பொடியாக்கி காலை ஓட்மீல் அல்லது ஏதாவது ஒரு கஞ்சியில் கரைத்துக் குடிக்கலாம். காளான்கள் செய்யும்போது அதற்கு சைடிஸ்ஸாக சூரியகாந்தி விதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு டயட்டில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சரியான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம். அவர்களிடம் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டால், கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை.

top videos

    அதே நேரத்தில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல், சூரியகாந்தி விதைகளை மிக அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஊட்டச்சத்துகளின் வளம் அதிகம் இருப்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது கர்ப்பிணிகளுக்கு தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தும். எனவே, அதில் சற்று கூடுதல் கவனம் தேவை!

    First published:

    Tags: Pregnancy, Pregnancy care, Pregnancy diet