Home /News /lifestyle /

பூசணி விதையில் இவ்வளவு சத்துகள் உள்ளதா?

பூசணி விதையில் இவ்வளவு சத்துகள் உள்ளதா?

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

Pumpkin seeds | பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
    பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து வெளியே கொட்டிவிடுவார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு.  இப்படிப்பட்ட பூசணிக்காயில் உள்ள விதையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    1. பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

    2. பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்ஸ் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    3. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நல்ல தூக்கத்தை வரும்.

    4. பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

    5. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.

    6. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Food

    அடுத்த செய்தி