தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா..?

தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா..?

water melon

நீண்ட கோடை நாட்களை வரவேற்க தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மையறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்துவிடும். குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி . இது தரும் எண்ணற்ற பலன்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

  • Share this:
நீண்ட கோடை நாட்களை வரவேற்க தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மையறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்துவிடும். குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி . இது தரும் எண்ணற்ற பலன்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

* கோடைகாலத்தில் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் நீரேற்றமாக இருக்கலாம். தர்பூசணியில் கிட்டத்தட்ட 92 சதவீத நீர் உள்ளது, இது நம் உடலை ஹைட்ரேட் செய்து, இழந்த ஆற்றலை ஈடுசெய்கிறது.

* தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் கலவை உள்ளது, இது இதயத்தை பாதுகாத்து பல்வேறு இருதய பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

* தர்பூசணியின் தோல் மற்றும் சதை சிட்ரூலைன் என்ற அமினோ அமிலத்தால் நிரம்பியுள்ளது, இது இரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக தூண்டுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* தர்பூசணி பழம் சாப்பிடுவதால் செரிமானத்தின் போது நம் உடலில் சேமிக்கப்படும் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும். இதனால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.

* தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கித்தை பாதுகாத்து பல்வேறு பருவகால நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

* தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.

தர்ப்பூசணியில் செய்யக்கூடிய சிம்பிள் ரெசிபி குறித்து இங்கு காண்போம்.,

தர்பூசணி ஸ்மூத்தி :

தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம் (கொட்டை நீக்கி சிறிதாக வெட்டியது)- 3 கப்
பால் – 1 கப்
தயிர் – 1/2 கப்
தேன்- 3 ஸ்பூன்

செய்முறை :

தர்பூசணி பழத்தை 2 மணி நேரத்திற்கு முன்னால் பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் அதனை எடுத்து பால், தயிர் சேர்த்து ஜூஸ் ஜாரில் நன்கு அரைக்கவும். இந்த கலவையை வடிகட்டி இதனுடன் தேன் சேர்த்து பரிமாறலாம். suvaiyaana தர்பூசணி ஸ்மூத்தி ரெடி!

தர்பூசணி அல்வா :

தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம் - 1
வெல்லம் - 500 கிராம்
தேங்காய் - அரை மூடி
நெய் - 50 கிராம்
முந்திரி – 10
பாதாம்- 10
ஏலக்காய்த் தூள் – தேவையான அளவு
கேசரி பவுடர்- சிறிதளவு

செய்முறை:

தர்பூசணியினை விதைகளை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடியாக்கி அதில் தண்ணீர் சேர்த்து இந்த வெல்லக் கரைசலை ஊற்றி பாகு காய்ச்சவும். மிக்சியில் தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து பால் பிழிந்து கொள்ளவும். அடுத்து அரைத்த தர்பூசணி, தேங்காய்ப்பால், கலர் பவுடர் சேர்த்து கொதிக்கவிட்டு இதில் வெல்ல பாகை சேர்க்கவும். பின்னர் நெய் ஊற்றி கைவிடாமல் கிளறி ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கினால் தர்பூசணி அல்வா ரெடி.
Published by:Ram Sankar
First published: