விரதம் என்பது ஒருநாள் முழுவதும் செரிக்கக் கூடிய உணவுகளை அருந்தாமல் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். இது அனைவருக்குமே பழக்கப்பட்ட விஷயம்தான். இந்தியாவில் விரதம் என்பது மத ரீதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்காகக் கடைப்பிடிக்கப்படும் விஷயம் என்பதே உண்மை.
அதை உணர்ந்த பலரும் இன்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஃபாஸ்டிங் என்று சொல்லக் கூடிய விரதம் இருக்கின்றனர். குறிப்பாக ஃபிட்னஸ் விரும்பிகள் கட்டாயம் விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். அப்படி என்ன நன்மை இதில் என்று கேட்கிறீர்களா..?
உண்மையில் விரதம் இருப்பது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்ய பின்பற்றப்படுகிறது. அதாவது வாரம் முழுவதும் இயங்கும் உடலுக்கு ஒருநாள் மட்டும் விடுப்பு அளித்து தன்னைத்தானே பழுது நீக்க வேலைகளில் ஈடுபட வைப்பதாகும். இதனால் தேவையற்றக் கொழுப்புகள் இருந்தாலும் கரைந்துவிடும்.
சமையலறையில் இருக்க வேண்டிய 5 வகையான எண்ணெய்கள்
அதுமட்டுமன்றி இவ்வாறு செய்வதால் குடல் கிருமிகளுக்கு நல்லது என ஆய்வுப் பூர்வமாகவும் நிரூபித்துள்ளனர். அதாவது குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை பாதுகாக்க இந்த ஃபாஸ்டிங் முறை உதவுகிறது. இந்த நுண்ணுயிர்கள் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அளித்தல், வளர்ச்சிதை மாற்றத்தை உண்டாக்குதல் என உடலில் முக்கிய அம்சங்களுக்கு உதவக்கூடிய பில்லியன் கணக்கான பாக்டீரியாக்களைக் கொண்டது.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கிறீர்களா..? ஆபத்து உங்களுக்குத்தான்..!
எனவே நோய் அறிகுறிகள் விரைவில் தாக்ககூடிய எந்த செயல்களையும் ஃபாஸ்டிங் மூலம் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல்நலக் குறைபாடுகள் இருக்காது. அதேபோல் விரதம் முறையில் கொழுப்புகளும் கரைவதால் உடல் எடைக் குறைக்கவும் உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.