முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலத்தில் சூடான மூலிகை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

குளிர்காலத்தில் சூடான மூலிகை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

Benefits of Drinking Hot Herbal Tea : உடலை வெப்பமாக வைப்பதற்கு சூடான தேநீர் உதவியாக இருக்கிறது.

Benefits of Drinking Hot Herbal Tea : உடலை வெப்பமாக வைப்பதற்கு சூடான தேநீர் உதவியாக இருக்கிறது.

Benefits of Drinking Hot Herbal Tea : உடலை வெப்பமாக வைப்பதற்கு சூடான தேநீர் உதவியாக இருக்கிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

குளிர்காலம் வந்துவிட்டாலே சூடான பானங்கள் கதகதப்பான உணர்வை தருவதோடு நம்மை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும். நீண்டகாலம் உடலின் வெப்பத்தை தக்கவைக்க, அடிக்கடி சூடான பானங்களை அல்லது உணவுகளை சாப்பிடும் பழக்கம் குளிர்காலத்தில் அதிகமாகவே இருக்கும். வெளிப்புறத்தில் ஆடைகளால் குளிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மாற்றிக் கொண்டாலும், நம்முடைய உட்புறத்தில், உடலை வெப்பமாக வைப்பதற்கு சூடான தேநீர் உதவியாக இருக்கிறது.

பொதுவாகவே குளிர்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக தேநீர் குடிக்கும் பழக்கம் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. மூலிகைகள் சேர்த்த தேநீரை குடிப்பதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். தேநீரை பலவிதமாக தயாரிக்கலாம். பால் சேர்ப்பது, பால் இல்லாமல் குடிப்பது, இஞ்சி தேநீர், எலுமிச்சை தேநீர் பல தேநீர் வகைகள் உள்ளன. குளிர்காலத்தில் உங்கள் உடலின் வெப்பத்தை தக்க வைப்பதற்கு மசாலா பொருட்கள் மற்றும் மூலிகைகள் சேர்த்து சுவையான பானமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு மூலிகையும் அல்லது ஒவ்வொரு ஸ்பைஸ் எனப்படும் மசாலா பொருளும் மற்றும் மூலிகைகளின் கலவைகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு விதமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்கள் உள்ளன. குளிர்காலத்தை பொருத்தவரை கொழுப்பு அதிகமுள்ள, நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த நெய், இறைச்சி, உலர் பழங்கள் கொட்டைகள் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மகுடம் வைத்தது போல, நீங்கள் சாப்பிட்ட பிறகு, சூடான ஒரு கோப்பை ஹெர்பல் டீ குடித்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியாக மாறும். அதுமட்டுமின்றி உங்களுடைய செரிமான அமைப்பும் சிறப்பாக செயல்படும்.

உணவின் போது மட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஒரு கோப்பை சூடான தேநீர் அல்லது மசாலா, அல்லது மூலிகைத் தேநீரை குடிப்பது பின்வரும் பயன்களை அளிக்கும்.

also read : ஒமைக்ரான் வேரியண்ட்.. மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் தருமா?

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பானம் :

பொதுவாகவே தேநீரில் ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் உடலில் இருக்கும் ஆக்சிடேஷன் ஸ்ட்ரெஸ்சை எதிர்க்கும் தன்மை கொண்ட பொருட்கள் நிறைந்துள்ளன. இது இளமையாக வைத்திருக்கும் ஒரு காம்பவுண்ட். மசாலாப் பொருட்களிலும் இந்த பண்பு அதிகமாக காணப்படுகிறது. ஹெர்பல் அல்லது ஸ்பைஸ் தேநீர் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர்காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை தடுக்க உதவுகிறது.

ஆற்றலையும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது :

குளிர்காலத்தில் நமக்கு மிகவும் விருப்பமான உணவுகளை உண்டாலும், மனநிலையை மேம்படுவதற்கான சாக்லெட் அல்லது சாக்லேட் பானங்களை அதிகமாகப் பருகும் வழக்கம் அதிகரித்து வருகிறது. விரும்பும் உணவுகளை எந்த அளவுக்கு சாப்பிடுகிறீர்களோ, அதேபோல மூலிகை சேர்க்கப்பட்ட தேநீரையும் பருகி உங்கள் ஆற்றலை அதிகரிக்கலாம். லாவண்டர், கேமொமில், அல்லது ஏலக்காய் தேநீர் ஆகியவை உங்கள் மனதை அமைதியாக்கி உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

செரிமானத்தை சீர் செய்கிறது :

குளிரைத் தாங்கக்கூடிய திறன் உடலுக்கு வேண்டும் என்பதற்காக குளிர்காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவு உணவு உட்கொள்ளப்படுகிறது. இதனால் செரிமான கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதினா, இஞ்சி, ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தேநீரை அவ்வப்போது குடித்து வந்தால் செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

also read : குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைக்க இதை செய்யுங்கள்..

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக குறைவாக இருக்கும் பொழுது வெளியில் செல்லக்கூட தோன்றாது. எனவே அதிகமான ஆக்டிவிட்டிகளில் ஈடுபட மாட்டோம். உடற்பயிற்சி அல்லது உடல்ரீதியான செயல்பாடுகள் குறையும் பொழுது இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு இலவங்கப்பட்டை அல்லது புதினா டீ அருந்துவது உடலுக்குள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி மற்றும் இருமலை தடுக்கிறது :

இஞ்சி மற்றும் அதிமதுரம் சேர்க்கப்பட்ட டீ உடலுக்கும் மனதுக்கும் ஆறுதலாக இருப்பதோடு வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

First published:

Tags: Herbal Tea