ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலையில் க்ரீன் ஜூஸ் எவ்வளவு ஆரோக்கியமானது..? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் ரகசியம்

காலையில் க்ரீன் ஜூஸ் எவ்வளவு ஆரோக்கியமானது..? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் ரகசியம்

க்ரீன் ஜூஸ்

க்ரீன் ஜூஸ்

கிரீன் ஜூஸ் பருகுவதுதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி சருமம் உட்புறத்திலிருந்து பொலிவுறும். அதுமட்டுமில்லாமல் இயற்கையாகவே இது ஒரு டீடாக்ஸ் ஆக செயல்படுவதால் உங்கள் தோற்றமும் மெருகேறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பது, எடை குறைக்கும் முயற்சி, எடை கட்டுக்குள் வைத்திஉர்ப்பது என்று பல்வேறு விஷயங்களுக்கு கிரீன் ஜூஸ் என்று கூறப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து செய்யும் ஜூசை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வீகன் டயட்டை பயன்படுத்தவர்களும் கிரீன் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

காலையில் எழுந்தவுடன் காலையில் எழுந்தவுடன் கிரீன் ஜூஸ் குடித்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் எடை குறைப்பதில் அது மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் கிரீன் ஜூஸ் குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பகிர்ந்தவை இங்கே.

தினசரி காலையில் கிரீன் ஜூஸ் குடிக்கலாமா?

உடல் எடை குறைப்பு என்று வரும்பொழுது அவ்வப்போது ஒரு மிகப்பெரிய ட்ரெண்ட் ஆகும். அதில் பல காலமாக கிரீன் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பகிரப்பட்டு வருகிறது. காய்கறிகள், கீரைகள், உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்து உடனடியாக குடிக்கும் கிரீன் ஜூஸ் என்பது ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் ஒரு உணவாகும். எனவே உங்களுடைய காலை நேரத்தை பலவிதமான காய்கறிகள் மற்றும் கீரைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து அதை ஜூஸாக குடிப்பது என்பது சிறந்த உணவு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல், காலை நேரத்தில் பொதுவாகவே உடல் கொஞ்சம் அமிலத்தன்மை அதிகம் நிறைந்ததாக இருக்கும். எனவே காலையில் கிரீன் ஜூஸ் குடித்தால் உங்கள் உடலின் பிஎச் அளவு சரி செய்யப்பட்டு நீங்கள் நீண்ட நேரத்திற்கு ஆற்றலுடன் இருப்பீர்கள். உடலின் அமிலத்தன்மை குறையும்போது, அழற்சி ஏற்படும் அபாயமும் குறைகிறது. ஆல்கலைன் ஆற்றல் அதிகரிக்கிறது, இதனால் செரிமானம் மேம்படுகிறது. கிரீன் ஜூஸில் உடல் நச்சுத்தன்மை நீக்கும் தன்மையும் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பலவித நன்மைகளும் கிடைக்கின்றது.

கிரீன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அழற்சி எதிர்ப்பு

உடலில் பலவித காரணங்களுக்காக சருமத்தின் மேற்புறத்திலும், உட்புறம், செல்கள், திசுக்கள் என்று எல்லாவற்றிலும் அழற்சி ஏற்படலாம். அழற்சி என்பது நாள்பட்ட நோயாக மாறி உங்களை தீவிரமாக பாதிக்கும். காலையில் தினமும் நீங்கள் கிரீன் ஜூஸ் குடித்து வந்தால் அழற்சியை மிகச் சிறந்த முறையில் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் உறுப்புகள் சிறப்பாக வேலை செய்யும்.

Also Read : உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!

 செரிமானம் மேம்படும்

காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக நார்சத்து இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றில் புரோபயாட்டிக் நன்மைகளும் உள்ளன. இவை இரண்டுமே செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்து செரிமானத்தை மேம்படுத்தும்.

சருமம் பளிச்சிடும்

கிரீன் ஜூஸ் பருகுவதுதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி சருமம் உட்புறத்திலிருந்து பொலிவுறும். அதுமட்டுமில்லாமல் இயற்கையாகவே இது ஒரு டீடாக்ஸ் ஆக செயல்படுவதால் உங்கள் தோற்றமும் மெருகேறும்.

கிரீன் ஜூஸ் குடிப்பதால் வரும் பக்க விளைவுகள்

கிரீன் ஜூஸ் ஏகப்பட்ட நன்மைகளை வழங்கினாலும் கூட ஒரு சிலருக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆக்சலேட் என்று கூறப்படும் ஒரு காம்பவுண்ட் கிரீன் ஜூஸில் அதிகமாக இருக்கிறது. எனவே இது ஒரு சிலருக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கிட்னி சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மற்றும் நோய்கள் இருப்பவர்கள் கிரீன் ஜூசை தவிர்க்க வேண்டும்.

Also Read : உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாக்க க்ரீன் ஸ்மூத்தி ரெசிபி வகைகள்...

கிரீன் ஜூஸ் ரெசிபிக்கள்:

கேல், செலரி, வெள்ளரி, கொத்தமல்லி, பச்சை ஆப்பிள், ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, இனிப்பு வேண்டுமென்றால் தேன் சேர்த்து குடிக்கவும்.
கடல் பாசி, முருங்கை, அருகம்பில், துளசி, மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து குடிக்கலாம்.
பாலக்கீரை, வெள்ளரி, முருங்கை மற்றும் இளநீர் ஆகியவற்றை அரைத்து, சுவையான ஜூஸை குடிக்கலாம்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Healthy juice