HOME»NEWS»LIFESTYLE»food benefits of brinjal and purple power explained against cancer sleep apnea ghta mg

உணவில் கத்தரிக்காயை ஒதுக்குகிறீர்களா? பலரும் அறியாத அதன் நன்மைகளைப் பற்றி படிக்க க்ளிக் பண்ணுங்க..

ஒவ்வொரு காய்கறியும் தனித்துவம் வாய்ந்த சத்துக்கள் நிறைந்ததாக இருக்கின்றன

உணவில் கத்தரிக்காயை ஒதுக்குகிறீர்களா?  பலரும் அறியாத அதன் நன்மைகளைப் பற்றி படிக்க க்ளிக் பண்ணுங்க..
மாதிரி படம்
  • Share this:

காய்கறிகள் என்று சொன்னாலே நன்மைகள் ஏராளமாக நிறைந்தது. ஒவ்வொரு காய்கறியும் தனித்துவம் வாய்ந்த சத்துக்கள் நிறைந்ததாக இருக்கின்றன. இருப்பினும் சில காய்கறிகளை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. அதில் ஒரு காய்கறி தான் கத்தரிக்காய். கத்தரிக்காய்யை பெரும்பாலான மக்கள் உணவில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அதிலும், அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்கள்.  உணவில் இருந்து ஒதுக்கக்கூடாத கத்தரிக்காயின் நன்மைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளது

1. கத்தரிக்காய் அதிக நார்ச்சத்து மற்றும் நீர் சத்து கொண்டது. மேலும் ஒரு கப் கத்தரிக்காயில் 35 கலோரிகள் மட்டுமே நிறைந்துள்ளன. இதனால் எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

2. தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகளை குணப்படுத்த கத்தரிக்காயை சாப்பிடலாம் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.3. இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.

4. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

5. இதில் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால் தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.

6. பல நூற்றாண்டுகளாக, இதன் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்ப் இருப்பதால் கத்திரிக்காய்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

7. புற்றுநோய் வராமல் காக்கும். தக்காளிக்கு இணையானது. தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

8. ஊதா பழங்கள் மற்றும் காய்கறிகளான பீட்ரூட், அவுரிநெல்லிகள், பிளம்ஸ் மற்றும் கத்திரிக்காய் ஆகியவை அந்தோசயனின் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளன.

9. உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தை சமன்படுத்தும். நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் பசியின்மை அகல்கிறது. உடல் வலிமை குறைவதை தடுக்க முடியும். மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

10. கத்தரிக்காய் ஒரு நிரப்பு மூலப்பொருளாக நன்றாக வேலை செய்கிறது. உணவை சுற்றியுள்ள சுவைகளை சமநிலைப்படுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது.

11. கத்தரிக்காய்களில் குறிப்பிடத்தக்க அளவு இரும்பு மற்றும் கால்சியம் உள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த வலிமைக்கும் ஒருங்கிணைந்தவை.

12. டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.

 
Published by:Gunavathy
First published: