கோதுமை புல் சாறு பருகுவதால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்!

கோதுமை புல் சாறு பருகுவதால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்!

ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற செயற்கை உணவுகளுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறுகளுக்கு கிடைப்பதில்லை. அருகம்புல் சாறு குறித்து கேள்விபட்டிருக்கும் பலருக்கும் கோதுமை புல் சாறு புதிதாகவே இருக்கும்.

ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற செயற்கை உணவுகளுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறுகளுக்கு கிடைப்பதில்லை. அருகம்புல் சாறு குறித்து கேள்விபட்டிருக்கும் பலருக்கும் கோதுமை புல் சாறு புதிதாகவே இருக்கும்.

  • Share this:
நோய்நொடி இல்லாத வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம் என்றாலும், அதுகுறித்த தேடல் எதாவது ஒரு பிரச்சனைகளை சந்திக்கும்போது மட்டுமே மக்களிடையே அதிகரிக்கிறது. ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற செயற்கை உணவுகளுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறுகளுக்கு கிடைப்பதில்லை. அருகம்புல் சாறு குறித்து கேள்விபட்டிருக்கும் பலருக்கும் கோதுமை புல் சாறு புதிதாகவே இருக்கும். ஆனால், கோதுமை இலைச்சாறில் மருத்துவ குணங்களும், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன

சிறந்த நச்சுநீக்கி

மோசமான உணவுகளை எடுத்துகொள்வதால் உடலில் கழிவுகளும், நச்சுதன்மையும் சேர்கின்றன. இதில் இருக்கும் குளோரோஃபில் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றுவதுடன் சிறந்த நச்சுநீக்கியாகவும் செயல்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாடுக்கு கோதுமை புல் சாறு பயன்படுகிறது. நாள்தோறும் பருகிவந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேறி, புதிய உற்சாகத்துடன் நீங்கள் இருப்பதை உணர்வீர்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்

கோதுமை புல் சாறில் இருக்கும் அதிக அளவு என்சைம்கள், உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வாயு, வீக்கம் மற்றும் வயிற்று அசெளகரியம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலில் தேங்கும் நச்சுகளையும், கெட்ட கொழுப்புகளையும் நீக்குவதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

இதய பிரச்சனைக்கு தீர்வு

குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கோதுமை புல் சாறில் இல்லாததால், இந்த சாறை எடுத்துக்கொள்ளும்போது உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. ஊட்டசத்துக்கள் நிரம்பிய இந்த சாறை பருகியபிறகு திருப்தியான உணர்வை பெறுவீர்கள். பசி எடுப்பதை குறைக்கும். கொழுப்புகளை கரைத்து விடுவதால், இதயம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள். இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா வைரஸ் வேகமாக பரவிய பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பற்றி அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தோம். அந்தவகையில் கோதுமை புல் சாறில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகியவை தொற்று நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். இந்த ஜூஸை இடைவிடாமல் எடுத்துக்கொண்டால், நோய் தொற்றுகளில் இருந்து விரைவாக மீண்டு வருவீர்கள். மேலும், நோய் எதிர்ப்பு மண்டலமும் பலமாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்

கோதுமை புல் சாறில் இருக்கும் குளோரோஃபில் மூலக்கூறுகள் ஹீமோகுளோபினுக்கு ஒத்ததாக இருப்பதுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், சீராக இருக்கவும் கோதுமை இலைச்சாறு உதவுகிறது. இதில் இருக்கும் கலவைகள் இன்சுலினுடன் ஒத்திருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்கின்றன. மேலும், பதட்டத்தை நீக்கி, ஞாபக சக்தியை பெருக்குகிறது.

யார் எடுத்துக்கொள்ளலாம்?

கோதுமை புல் சாறை ஒருவர் முதலில் குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். புதிதாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து ஜூஸ் எடுத்துக்கொள்வதை அதிகப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஜூஸ் ஆரோக்கியமானது என்றாலும், வயிற்றுவலி, மலச்சிக்கல், குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் தவிர்த்தல் நல்லது. கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தால் இந்த ஜூஸை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Published by:Ram Sankar
First published: