பிரண்டை பொடி ரெசிபி...

பிரண்டை பொடி

பிரண்டை குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. கால்சியம் சத்து நிறைந்ததால் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் நன்மை செய்வதால் எல்லோரும் இதை விரும்பி சாப்பிட தொடங்கியிருக்கிறார்கள். எளிதில் வளரக்கூடிய பிரண்டை செடியை வீடுகளில் வளர்ப்பதும் எளிது.

 • Share this:
  பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வபோது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையை பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

  தேவையான பொருட்கள்:

  பிரண்டை - 3 கப்

  உளுந்தம் பருப்பு - 1 கப்

  கடலை பருப்பு - அரை கப்

  வரமிளகாய் - 1 கைப்பிடி அல்லது காரத்துக்கேற்ப

  கருப்பு எள்ளு - 5 டீஸ்பூன்

  பெருங்காயம் - கட்டியாக

  உப்பு - தேவைக்கேற்ப

  கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

  மிளகு - 2 டீஸ்பூன்

  பிரண்டை


  செய்முறை:

  பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து தட்டி கொட்டி ஆறவிடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்துகொள்ளுங்கள். தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும்.

  மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தித்திப்பான திரட்டுப் பால் செய்வது எப்படி?

  இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்தில் பொடியை கலந்து நெய்விட்டும் சாப்பிடலாம். இப்போது பிரண்டை பொடி ரெடி, இதை எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

  மேலும் படிக்க...சுவை மிகுந்த ரவா லட்டு ரெசிபி...
  Published by:Vaijayanthi S
  First published: