முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே..

தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே..

பாதாம்

பாதாம்

பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன

  • Last Updated :

நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான்.

அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம் (Almonds). இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான்.

ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். ஏனெனில், சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும். இந்த ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

பாதாம் ஏன் பலரின் விருப்பமான நட்ஸாக இருக்கிறது?

பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தருகிறது. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.

பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்களும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. மேற்சொன்ன காரணங்களாலும் பலரும் பாதாமை விரும்பி சாப்பிடுகின்றனர்.

கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறைக்கலாமா...?

30 கிராம் பாதாமில் தோராயமாக உள்ள சத்துக்கள் :

கலோரிகள் -163

நார்ச்சத்து - 3.5 கிராம்

புரதம் - 6 கிராம்

கார்ப்ஸ் - 2.5 கிராம்

கொழுப்பு (Fat) - 14 கிராம்

37% பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் E

32% பரிந்துரைக்கப்பட்ட மெக்னீசியம்

மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பாதாம் கொண்டுள்ளது.

பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

இரத்தம் சோகை :

உடலில் ஓடும் இரத்தம் சீரான முறையில் இருக்க இரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் பாதம் சாப்பிடுங்கள்.

சருமம் :

நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து காக்கும் கவசமாக மேற்புற தோல் செயலாற்றுகிறது. பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.

உடலுக்கு வலு :

பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

இதய ஆரோக்கியம் :

கொழுப்பு (Fat) நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

மலச்சிக்கல் :

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக பானிபூரி, மசாலா உணவுகள் உடலுக்கு மோசமானவை. பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும். எனவே மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தினம் 5 - 8 ஊறவைத்த பாதம்களை சாப்பிடலாம்.

பிற மருத்துவ குணங்கள் :

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் E சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது. இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும் : 

தினமும் 5 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் பயன் உங்களின் கொலஸ்ட்ரால் குறைவதே. குறிப்பாக ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவை குறைய வைக்கிறது. மேலும், உடல் பருமனையும் கூடாமலும் இந்த பாதாம் பார்த்து கொள்கிறது. பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.

முக சுருக்கங்களை போக்கும் : 

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருப்பது தான். ஆனால், உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்கள் ஆசையை நிராசையாக மாற்றுகிறதா? இனி உங்களின் முக சுருக்கங்களை போக்குவதற்கு 5 பாதாம்கள் போதும். இதில் உள்ள மக்னெஸ் சுருக்கங்களை மறைய வைக்கிறது. பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

மூளையை பலப்படுத்தும் : 

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே சாப்பிட்டு பழக வேண்டும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற B வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. இது புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

தலைமுடி மற்றும் கர்பத்திற்கும் பலன் தரும் :

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது. பெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.

First published:

Tags: Almond, Health Benefits, Nuts