கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடி... ரெசிபி இதோ..

கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடி... ரெசிபி இதோ..

சுரைக்காய் பச்சடி

நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக சுரைக்காயை உணவில் சேர்ப்பது நல்லது.

  • Share this:
    கோடை காலத்தில் விளையும் சுரக்காயை வைத்து வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடியை செய்யலாம். சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. இப்போது சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன சுரக்காய் - 1

    பெரிய வெங்காயம் - 1 சிறியது

    தயிர் - 1 கப்

    வரமிளகாய் - 2

    கறிவேப்பிலை - 4 இலை

    தாளிக்க :

    கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க :

    இஞ்சி - சிறுதுண்டு

    பூண்டு - 5 பற்கள்

    சீரகம் - 1 தேக்கரண்டி

    மிளகு - 1/2 மேசைக்கரண்டி

    கறிவேப்பிலை - 2 இலை

    செய்முறை :

    சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும் அல்லது பொடிமாஸ் கட்டையில் துருவிக் கொள்ளலாம். அத்துடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

    மேலும் படிக்க...  சுவையான ஆட்டுக்கால் பாயா செஞ்சிருக்கீங்களா? இதோ ரெசிபி

    அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிட வேண்டும். பிறகு தேவையான உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ள வேண்டும். அதில் அரைத்து வைத்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும். அத்துடன் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்க வேண்டும். இப்போதுசத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி. இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: