Home /News /lifestyle /

தயிர் சாதத்திற்கு ஏற்ற பாகற்காய் உருளைக்கிழங்கு பொறியல்..!

தயிர் சாதத்திற்கு ஏற்ற பாகற்காய் உருளைக்கிழங்கு பொறியல்..!

பாகற்காய் உருளைக் கிழங்கு பொரியல்..!

பாகற்காய் உருளைக் கிழங்கு பொரியல்..!

பாகற்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். உருளைக்கிழங்கு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் நிறைந்தது.

    பாகற்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். உருளைக் கிழங்கு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் நிறைந்தது. இவை இரண்டையும் வெயில் காலத்திற்கு உகந்த தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சிறந்த விருந்தாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    பாகற்காய் - 1
    உருளைக் கிழங்கு - 1
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தாளிப்பதற்கு அவசியமான அளவு



    செய்முறை 

    பாகற்காய் , உருளைக்கிழங்கு இரண்டையும் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    வானலியில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் போட்டு பொரித்து எடுக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியும் பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளவும்.

    வதங்கியதும், வெட்டி வைத்திருக்கும் பாகற்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    காய் வேகும்தன்மைக்கு ஏற்ப கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    சுவையான பாகற்காய், உருளைக்கிழங்கு பொறியல் தயார்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி