• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீரழிவு நோய் தன்மையை குறைக்கும் குதிரைவாலி சாலட்...

நீரழிவு நோய் தன்மையை குறைக்கும் குதிரைவாலி சாலட்...

குதிரைவாலி சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

  • Share this:
குதிரைவாலி என்பது சிறுதானியம். தற்போது தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. குதிரைவாலி அரிசியில் குறைந்த அளவு கலோரி உள்ளது.நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் அரிசி, கோதுமை உணவை காட்டிலும் இதில் அடங்கியிருக்கும் கலோரியின் அளவு மிக குறைவு. அதோடு நார்ச்சத்தும் மிகுந்திருக்கு உணவாகவே இது இருக்கிறது.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். அந்த வகையில் குதிரைவாலி சாலட் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாங்க...

குதிரைவாலி அரிசி


தேவையான பொருட்கள்:

குதிரை வாலி - ஒரு கப்

தக்காளி - இரண்டு

வெள்ளரிப் பிஞ்சு - ஒன்று

எலுமிச்சம் பழச் சாறு - மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

பூண்டு - 10 பல்

வெங்காயம் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

சாலட் எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

10 பல் பூண்டையும் விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, குட மிளகாய், வெள்ளரி, வெங்காயம் ஆகிய இவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குதிரை வாலி அரிசியை நன்றாக ஊறவைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றாகக் கலந்து எலுமிச்சம் பழச் சாறு, மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு, எண்ணெய் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பின்னர் முன்பு நாம் வேக வைத்த குதிரை வாலி அரிசியை மேற்கண்ட காய் கறிகளுடன் நன்றாகக் கலந்து சில மணி நேரங்கள் நன்கு குளிரவிட்டுப் பரிமாறவும். இதோ இப்போது சுவையான குதிரை வாலி சாலட் தயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: