ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பழுத்து போன வாழைப்பழத்தை வைத்து இப்படியொரு ஸ்வீட்.. நீங்களும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!

பழுத்து போன வாழைப்பழத்தை வைத்து இப்படியொரு ஸ்வீட்.. நீங்களும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!

வாழைப்பழ ஸ்வீட்

வாழைப்பழ ஸ்வீட்

வாழை பழத்தில் இப்படியொரு அருமையான ஸ்வீட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. வாழையில் பல வகையுண்டு. செவ்வாழை, பச்சை பழம், மஞ்சள் பழம், கற்பூர வாழை, பூ பழம் என சொல்லிக்கொண்டே போகலாம். நம் வீடுகளில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும் பழத்தில் வாழைப்பழமும்  ஒன்று. பெரும்பாலும் பல வீடுகளில் ஃப்ரிட்ஜிக்கு மேல் டசன் கணக்கில் வாழைப்பழம் இருப்பதை பார்க்க முடியும். இதை ஃபிரிட்ஜில் வைக்க முடியாது அதனால்  வெளியில் தான் வைப்பார்கள். தோல் கருப்பாகி, பழம் நன்கு பழத்த பின்பு குழந்தைகளை அதை சாப்பிட விரும்பமாட்டார்கள். உடனே அதை தூக்கி போடுவது தான் வழக்கம்.

  ஆனால் இனிமேல் அப்படி தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை. பழத்த வாழை பழத்தில் இப்படியொரு அருமையான ஸ்வீட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அது போதும். ஒருவேளை பழம் மீந்துவிட்டால் அதை தூக்கி போடாமல் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த ஸ்வீட்டை செய்து கொடுங்கள். இந்த ரெசிபி பிரபல சமையல் யூடியூப் சேனலான பாப்பாஸ் கிச்சனில் இடம்பெற்றுள்ளது. வாங்க இந்த ஸ்வீட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

  ரவை, பழைத்த வாழைப்பழம், நெய், முந்திரி, பால், ஏலக்காய் பவுடர்.சர்க்கரை, தேங்காய் துருவல்

  செய்முறை:

  1. முதலில் ரவையை மிதமான சூட்டில் வறுத்தக் கொள்ள வேண்டும்.

  2. பின்பு கடாயில் நெய் ஊற்றி அதில் வட்டமாக நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிதமாக வறுக்க வேண்டும்

  3. பின்பு 1 கப் பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதில் வறுத்த ரவை சேர்த்து  நெய் ஊற்ற வேண்டும். கிட்டத்தட்ட அல்வா பக்குவத்திற்கு வர வேண்டும்.

  ' isDesktop="true" id="718062" youtubeid="pK7iAl1xWT0" category="food">

  4. கடைசியாக தேவையான அளவு சர்க்கரை , தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும். பின்பு வறுத்த முந்திரி தூவி இறக்கினால் சூப்பரான வாழைப்பழ ஸ்வீட் தயார்.

  யூடியூபில் கலக்கும் சைவ மீன் வறுவல்.. நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

  இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழமும் வேஸ்ட் ஆகாது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Cooking tips, Food recipes, Sweet recipes