ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாழைப்பழ பாயாசம் ட்ரை பண்ணிப்பாருங்க...

வாழைப்பழ பாயாசம் ட்ரை பண்ணிப்பாருங்க...

வாழைப்பழ பாயாசம்

வாழைப்பழ பாயாசம்

Banana Payasam | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பாயாசமும் வாழப்பழமும்தான். அதனை கொண்டு ஒரு சூப்பரான ஸ்வீட் செய்தால் எப்படி இருக்கும்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வாழைப்பழம் சேர்த்து செய்யும் பாயாசம் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

பழுத்த மலை வாழைப்பழம் - 4

சர்க்கரை - 100 கிராம்

முற்றிய தேங்காய் - 1

ஏலக்காய் - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு - 25 கிராம்

பேரிச்சம் பழம் - 6

செய்முறை:

முதலில் வாழைப்பழங்களின் தோலை உரித்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பேரிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

தேங்காயைத் துருவி அரைத்து, அதில் சிறிதளவு நீர் விட்டு பால் எடுத்துக்கொண்டு அதில் சர்க்கரை போட்டு கலந்து வைக்கவும். ஏலக்காய் பொடியை தேங்காய்ப் பாலில் போட்டு கலக்கி, அதன்பின்னர் வாழைப்பழம், முந்திரி, பேரிச்சம் பழம் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மேலும் படிக்க... பாதாம் கீர் செய்வது இவ்வளவு ஈஸியா?

இந்தக் கலவையை சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் எடுத்து பரிமாரினால் வாழைப்பழ பாயாசம் ரெடி. இந்த பாயாசத்தை செவ்வாழைப்பழத்தை கொண்டும் செய்யலாம். ருசியாக இருக்கும்.

First published:

Tags: Banana, Sweet recipes