Home /News /lifestyle /

வாழை இலையில் அல்வா கூட செய்யலாமா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ...

வாழை இலையில் அல்வா கூட செய்யலாமா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ...

வாழை இலையில் அல்வா

வாழை இலையில் அல்வா

வாழை இலையில் இப்படி அல்வா செய்தும் சாப்பிடலாம் தெரியுமா..? எப்படி செய்ய முடியும் என யோசிக்கிறீங்களா..? ரெசிபி இதோ...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாழை இலை என்றாலே அது சாப்பிடுவதற்கு மட்டும்தான் என நினைத்துக்கொண்டிருந்தால் அது மிகவும் தவறு. இப்படி அல்வா செய்தும் சாப்பிடலாம் தெரியுமா..? எப்படி செய்ய முடியும் என யோசிக்கிறீங்களா..? ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

வாழை இலை - 2
சோள மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
முந்திரி - 10
கிர்ணி பழ விதைகள் - 20 கிராம்
எலுமிச்சை பழம் சாறு - 2 tbsp
ஏலக்காய் பொடி - 1/4 tsp
நெய் - 6 tbsp



செய்முறை :

முதலில் வாழை இலை சாறு தயார் செய்ய வேண்டும். அதற்கு இளசாகவும், முற்றியதாகவும் இல்லாதவாறு மீடியம் சைஸ் வாழை இலை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதை துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாறில் எலுமிச்சை சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் சோள மாவு கால் கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதே கப்பில் சர்க்கரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இவை இரண்டையும் கலந்த பின் அரைத்த வாழை இலை சாறை ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

சிக்கன் குழம்பே தோற்றுப்போகும் அளவிற்கு மீல் மேக்கர் கிரேவி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

இப்போது கடாய் வைத்து நெய் விட்டு முந்திரி மற்றும் கிர்ணி விதைகளை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் கலந்து வைத்துள்ள சோள மாவை கொட்டி நன்கு கிளறுங்கள். இடையிடையே மீதம் உள்ள நெய்யை விட்டு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிண்ட கிண்ட கெட்டிப் பதம் வரும். அப்போது ஒரு தட்டையான பாத்திரத்தில் நெய் தடவி அதில் கிண்டிய மாவை ஊற்றி அதன் மேல் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிர்ணி விதைகளை தூவி ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

மறுநாள் எடுத்துப்பார்த்தால் அல்வா பதத்தில் கெட்டியாக தளதளவென வாழை இலை அல்வா ரெடியாகி இருக்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Banana, Sweet recipes

அடுத்த செய்தி