பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும்.. குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால் மழை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதால் நம்மிடம் உள்ள பொருள்களை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட முயல்வோம். அதிலும் வாழைக்காய், வெங்காயம் இருந்தால் போதும் சூடான பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.
இந்த வரிசையில் இனிப்பு மற்றும் காரம் கலந்த சுவையோடு பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக வாழைப்பழ பஜ்ஜியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே காரம் மற்றும் இனிப்பு சுவையுடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழத்தைப் பயன்படுத்தி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.. வெறும் 5 நிமிடத்தில் சுலபமாக பஜ்ஜி ரெசிபியை எப்படி செய்வது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்..
வாழைப்பழ பஜ்ஜி செய்யத் தேவையான பொருட்கள்:
முழுதாக பழுக்காத பெரிய பச்சை வாழைப்பழங்கள்
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மஞ்சள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய்- 1கப்
கடலை மாவு – ¾ கிராம்
பேக்கிங் சோடா- ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
தண்ணீர் -1/4 கப்
Also Read : பாகற்கா ஊறுகாய் செய்ய தெரியுமா..? நீரிழிவு நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது..!
வாழைப்பழ பஜ்ஜி (பொரியல்) செய்யும் முறை:
முதலில் பழுக்காத பெரிய பச்சை வாழைப்பழத்தை நன்றாக தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, மஞ்சளை எடுத்துக் கொண்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து மாவு பஞ்சு போன்றதாக வரும் வரை நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஏற்கனவே தண்ணீருக்குள் வெட்டி வைத்திருந்த வாழைப்பழ துண்டுகளை எடுத்து சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கலந்து வைத்துள்ள மாவிற்குள் வாழைப்பழத்தைப் போட்டு கொஞ்சம் நேரம் ஊறவைத்து எடுக்க வேண்டும்.
Also Read : புரோட்டீன் நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகள்... டிரை பண்ணி பாருங்க... சுவையில் மெய் மறந்து போவீங்க...
இதனையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் மசாலா தடவி வைத்திருந்த வாழைப்பழத் துண்டுகளை சூடான எண்ணெய்யில் வறுத்தெடுக்க வேண்டும். இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சூடான வாழைப்பழ பஜ்ஜி ரெடியாகிவிட்டது. இனி உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்ந்து பரிமாறலாம்.
இனி ஈஸியாக உங்களது குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்துக் கொடுக்கலாம்.. நீங்களும் இந்த ரெசிபியை மறக்காமல் செய்துப் பாருங்கள்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banana, Evening Snacks