சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் வாழைப்பூவும் பரிந்துரைக்கப்படும். இது அவர்களுக்காக மட்டுமல்ல... குழந்தைகள் முதல் அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் துவர்ப்பு தன்மையால் பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் கட்லெட் செய்து கொடுத்தால் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டு பங்குக்கு வருவார்கள். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த வாழைப்பூ - 1.5 கப்
வேக வைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
சீரகம் உடைத்தது - 1/2 tsp
மிளகாய்த் தூள் - 1 அல்லது 1/2 tsp
கரம் மசாலா பொடி - 1/2
மைதா - 2 tsp
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
உப்பு மற்றும் தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
வறுக்க தேவையான பொருட்கள்
சோள மாவு - 2 tsp
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
பிரெட் க்ரம்ப்ஸ் - பிறட்டி எடுப்பதற்கு ஏற்ப
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை
வாழைப்பூவை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும்.
வெந்ததும் அதை மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் உறித்து அதை மசித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உடைத்த சீரகம், சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக வாழைப்பூ பேஸ்டை அதில் போடவும். வாழைப்பூ நீர் இறுகும் வரை பிரட்டவும்.
மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்
பின் மசித்த உருளைக் கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். பிறகு மிளகாய் பொடி, உப்பு மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டவும். அதிக நீர் இருப்பது போல் தெரிந்தால் கொஞ்சம் மைதா கலந்து கொள்ளுங்கள். அதோடு கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளவும்.
கலவையை நன்கு கலந்ததும் அதை தனியாக பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூ கலவையில் சூடு குறைந்ததும், கட்லெட் போல் தட்டிக் கொள்ளவும்.
பின் சோள மாவை கெட்டிப் பதத்திற்கு தண்ணீரில் கலந்து கொண்டு கட்லெட்டை அதில் முக்கி எடுக்க வேண்டும்.
அடுத்ததாக பிரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பதமாக பொறித்து எடுக்கவும். பொன்னிறமாக வரும் வரை பொறிக்கவும். உடையாமல் பார்த்துக் கொள்ளவும்.
வாழைப்பூ கட்லெட் ரெடி. கட்லெட் தொட்டுக் கொள்ள டொமேட்டோ சாஸ் பக்கா பொருத்தமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.