பக்ரீத்திற்கு சூப்பரான சுவையில் சீரக சம்பா அரிசியில் தேங்காய் பால் மட்டன் பிரியாணி : எப்படி செய்வது தெரியுமா?

மட்டன் பிரியாணி

நம்ம ஊரு ஸ்டைலில் அசத்தலாக இருக்கும் டிரை பண்ணி பாருங்க...

  • Share this:
பக்ரீத் என்றாலே மட்டன் தான் ஸ்பெஷல். அதுவும் மட்டன் பிரியாணி கைப்பக்குவம் மிக அருமையான சுவையாக இருக்கும். எனவே அதே சுவை மாறாமல் தேங்காய் பாலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 15
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பற்கள்
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/4 tsp
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 tsp
எலுமிச்சைப் பழம் - பாதி
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 15
தயிர் - அரை கப்
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கிராம்பு - 3
பட்டை - 3 துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - 1 tsp



செய்முறை:

மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் குக்கரில் மட்டனை போட்டு அதோடு கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அடுத்ததாக மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீண்டும் மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, முந்திரி சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு , அகலமான பாத்திரத்தில் வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றையும் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

Ghee Milk : உடல் எடை குறைப்பு முதல் தூக்கமின்மை வரை...பல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நெய் கலந்த பால் : எப்போது..எப்படி குடிக்க வேண்டும்..?

அடுத்ததாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.

வதங்கியதும், மிளகாய் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள பட்டை , கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
அந்த கலவையில் எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக எடுத்து வைத்துள்ள 4 கப் தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு மட்டன் வேக வைத்த தண்ணீரை இரண்டு கப்புகளாக எடுத்துக் கொண்டு அதையும் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு வேகவைத்த மட்டனையும் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு உப்பு, புதினா இலைகள், கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து கலக்கவும்.

அந்த கலவை ஒரு கொதி வந்ததும் அரிசியை கழுவிக் கொட்டவும். பிரியாணி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை விதைகளை நீக்கிப் பிழிந்து விடவும்.

பின் மீண்டும் தட்டு போட்டு மூடி பிரியாணி உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி விடவும்.

சுவையான தேங்காய் பால் மட்டன் பிரியாணி ரெடி.

 

 
Published by:Sivaranjani E
First published: