ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமையல் பொருட்களின் சூப்பர் ஹீரோவாக பேக்கிங் சோடா... அதை வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..!!

சமையல் பொருட்களின் சூப்பர் ஹீரோவாக பேக்கிங் சோடா... அதை வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..!!

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

முட்டைக்கு பிறகு பேக்கிங் சோடா தான் விதம் விதமான உணவுப் பொருட்களை செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். முக்கியமாக கேக்குகள், ரொட்டிகள் போன்றவற்றை  தயாரிக்கும் போது அவை நன்றாக உப்பி வருவதற்கும் மற்றும்பல உணவு பொருட்களை சமைக்கும் போது அவற்றுடன் கலந்து சுவை மற்றும் அவற்றின் தன்மையை மாற்றுவதற்கும் பேக்கிங் சோடா பயன்படுகிறது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முட்டைக்கு பிறகு பேக்கிங் சோடா தான் விதவிதமான உணவுப் பொருட்களை செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். முக்கியமாக கேக்குகள், ரொட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் போது அவை நன்றாக உப்பி வருவதற்கும் மற்றும்பல உணவு பொருட்களை சமைக்கும் போது அவற்றுடன் கலந்து சுவை மற்றும் அவற்றின் தன்மையை மாற்றுவதற்கும் பேக்கிங் சோடா பயன்படுகிறது.

இதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிரிஷ் அசோக் என்பவர் கூறுகையில், பேக்கிங் சோடாவானது உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் நம் உடலில் இயற்கையாகவே கணையமானது பைகார்பனேட்சை சுரந்து நாம் உட்கொள்ளும் உணவின் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்துவதற்கு உதவுகிறது.

நாம் உட்கொண்ட உணவு பொருளானது அமிலம் நிறைந்த இரப்பையில் செரிமானம் செய்யப்பட்டு குடலை அடையும் போது அங்கு கணையத்தின் செயல்பாட்டின் மூலம் அமிலத்தன்மை நீக்கபடுகிறது. அவ்வாறு செய்யவில்லையெனில் உணவில் உள்ள அமில தன்மையால் குடல் அறித்துவிடும் என்றும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் பேக்கிங் சோடாவை வேறு எந்த வகையான உணவுகளுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சன்னா அல்லது ராஜ்மா சமைக்கும்போது, ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும். இவை செல்களின் சுவற்றில் உள்ள பெக்டினை உடைக்கிறது. இதன் காரணமாக நம்மால் விரைவாக சமைக்க முடியும். அதனால் தான் பல உணவகங்களில் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெங்காயத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்ப்பதன் மூலம் விரைவாக கேரமலைஸ் ஆவதற்கு உதவுகிறது
பக்கோடா அல்லது இறைச்சி ஆகியவற்றை சமைக்கும் போது, சிறிதளவு பேக்கிங் சோடாவை மாவுடன் கலப்பதன் மூலம் மல்லியர்ட் விளைவை உண்டாக்கலாம்.
இவற்றைத் தவிர, ஒரு வேலை நீங்கள் பேக்கிங் சோடாவை உணவில் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றாலும் வேறு பல முக்கியமான வேலைகளுக்கும் பேக்கிங் சோடா உதவும்.
வினிகருடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்தால் சிற சிறந்த கிளீனிங் மற்றும் டிஸ்டேனிங் காம்பினேஷன் ஆக அது இருக்கும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவை ஒரு ட்ரேயில் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் இயற்கையாகவே குளிர்சாதன பெட்டியில் உண்டாகும் துர்நாற்றத்தை போக்குவதற்கு உதவுகிறது. ஒரு கப் நிறைய பேக்கிங் சோடாவை நிரப்பி, குளிர்சாதன பெட்டிக்கு பின்புறம் வைப்பதன் மூலமும் குளிர்சாதன பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க முடியும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து உடலில் துர்நாற்றம் ஏற்பட கூடிய பகுதிகளில் தேய்த்து கொள்வதன் மூலம், உடல் துர்நாற்றம் உண்டாவதை தடுக்க முடியும். சிலருக்கு இதனால் ஒவ்வாமை உண்டாகலாம். எனவே முதலில் சிறிது தடவி அதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை எனில் அதன் பிறகு வாடிக்கையாக பயன்படுத்தலாம்.
First published:

Tags: Baking soda