ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான பாதுஷாவை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்...

சுவையான பாதுஷாவை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்...

பாதுஷா

பாதுஷா

badusha Recipe | நம்முடைய வீட்டிலேயே பக்குவமாக பேக்கரி ஸ்டைல் பாதுஷா எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

என்னதான் இனிப்பு பலகாரங்களை கடையில் காசு கொடுத்து வாங்கினாலும், நம் கையால் செய்த திருப்தி கிடைக்குமா? உங்க கையால உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த பாதுஷாவை செஞ்சு கொடுத்து பாருங்க, அசத்தலாக இருக்கும்...

தேவையானபொருட்கள்:

மைதா - 1 1/2 கப்

வெண்ணெய் - 1/2 கப்

சர்க்கரை - 1/4 ஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:

சர்க்கரை - 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை:

1. மைதா, பேக்கிங் சோடாவை கலந்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

Also see... அசைவம் சாப்பிடும் போது இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்

2.மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும். குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.

3.பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைக்கவும். மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது, எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.

4. பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும்கடாயை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Sweet recipes