Bachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..

Bachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..
காலிஃப்ளவர் பனீர் ரெசிபி
  • Share this:
தோசை, இட்லிக்கும், சூடான சாதத்துக்கும் தனித்தனியாக சமைப்பதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதா? இதைச் செய்வதா, அதைச் செய்வதா என குழப்பிக்கொள்கிறீர்களா?
எல்லா நேரத்திலும் கைகொடுப்பதற்கு ஒரு ஹேண்டி ரெசிப்பி இதோ.

தேவையான பொருட்கள்:


வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டிவெங்காயம் - 2, பொடியாக நறுக்கியவை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 பொடியாக நறுக்கியவை
பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் வெட்டியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
காலிஃபிளவர் - 3 கப்பில் உதிர்த்து வைத்தவை
குடை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கியவை
பனீர் - 100 கிராம், நறுக்கியது
சோள மாவு - 1 தேக்கரண்டி

Cauliflower Paneer recipe
காலிஃப்ளவர் பனீர் ரெசிபி


1.வானலியில் எண்ணெயைச் சூடாக்கி, வெண்ணெயை விட்டு, சீரகத்தைத் தாளிக்கவும்.
2. வெங்காயம், மிளகாயை மிருதுவாகும் வரை 3 முதல் 4 நிமிடங்கள் வரை பொரிக்கவும்.
3. இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
4. தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
5.மசாலா பொடிகளையும் சேர்க்கவும்.
6.காலிஃபிளவர் சேர்த்து சிறுதீயில் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
7.பின்பு குடை மிளகாயைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
8.இறுதியாக பனீர் சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.
9.கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
10.கெட்டிப்பதம் வருவதற்காக கால் கப் தண்ணீரில் சோளமாவைக் கலந்து ஊற்றி வேக வைக்கவும்..
11. கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறவும்
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading