Home /News /lifestyle /

வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

நெய்

நெய்

Ayurveda tips : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் ஆதாரமான நெய், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, மேலும் வயதான மற்றும் அல்சைமர் நோயைத் தடுக்கிறது.

காலை எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?.

கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தங்களது உணவில் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது உண்டு. ஆனால் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால், அது செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது பலரும் அறியாத விஷயம் ஆகும்.

இந்தியர்களின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்றான அதன் மணத்திற்காக மட்டுமல்ல சுவைக்காகவும் உலக நாடுகள் பலவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது. சிறுகுடலின் உறிஞ்சுதல் திறனை மேம்படுத்துவது, இரைப்பையின் அமில தன்மையை குறைப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, நுண்ணுயிர் எதிர்பாற்றல், குடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கத்திரிக்காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டுருக்கீங்களா? மிஸ் பண்ணிடாதீங்க...
 ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் ஆதாரமான நெய், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, மேலும் வயதான மற்றும் அல்சைமர் நோயைத் தடுக்கிறது. உடல் எடையை குறைக்கவும் நெய் பயன்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பசுவின் நெய் உங்கள் உடலில் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதாகவும், ஆரோக்கியமான கொழுப்பைப் பராமரிக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்றவை இருப்பதால் அவை உடலால் எளிதில் உறிஞ்சுக் கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :  பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்யலாம் தெரியுமா?
 வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய்யுடன் உங்கள் நாளைத் தொடங்குவதால் ஏற்படும் சில முக்கிய நன்மைகள் இதோ...

1. செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது: நெய் வயிற்றில் அமில சுரப்புக்கு வழிவகுக்கிறது, இது உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.

2. பளபளப்பான சருமம்: தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், நெய் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

3.சீரான குடல் இயக்கம்:

நெய்யில் உள்ள வளவளப்பு தன்மை குடல் பாதையில் உணவை தேங்கவிடாமல் செய்து, சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

4. பசியை கட்டுப்படுத்தும்:

நெய் சேர்த்து சமைக்கப்படும் உணவை சிறிதளவு எடுத்துக்கொண்டாலே அது முழு திருப்தியை கொடுப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். எனவே நெய் சாப்பிடுவது பசி உணர்வை கட்டுப்படுத்தி, தவறான உணவு பழக்கங்களை தவிர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள் : கொள்ளு பொடி செய்முறை!

5. நெய் எலும்பின் வலிமை மற்றும் உறுதியை அதிகரிக்க உதவுகிறது.

ஒரு ஸ்பூன் நெய்யில் 112 கலோரிகள் இருக்கிறது. 0.04 கிராம் புரதம், ஏ, டி, கே போன்ற வைட்டமின்கள், 45 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், 2.7 மில்லி கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Ayurveda, Ghee

அடுத்த செய்தி