ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாவூறும் அயிரை மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் செஞ்சுபாருங்கள்...

நாவூறும் அயிரை மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் செஞ்சுபாருங்கள்...

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கிராமத்து ஸ்டைலில் நாவூறும் அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த வகை குழம்பு மதுரை பக்கம் வாரம் ஒருமுறையாவது செய்து சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் - 500 கிராம்

எண்ணெய் - அரை குழிக்கரண்டி

பூண்டு - 6 பல்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியாத் தூள் - இரண்டு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 200 கிராம்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

மேலும் படிக்க...ஆந்திரா ஸ்டைல் கார நண்டு மசாலா!

செய்முறை:

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து மண் இல்லாத படி நன்கு கரைத்து வடிக்கட்டி கொள்ளவும். இப்போது கரைத்த புளித்தண்ணீரில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் கடுகு, கருவேப்பிலை ஆகிய இவற்றை அதில் போட்டு நன்கு தாளிக்கவும். தாளித்த பொருள்களுடன் சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். உடன் தட்டிய பூண்டை போட்டு மேலும் நன்கு வதக்கவும்.

மேலும் படிக்க...செட்டிநாடு முட்டை மசாலா செய்வது எப்படி?

இப்போது கரைத்த புளிக் கரைசல் இதனுடன் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். இஅவை அனைத்தும் நன்கு கொதித்ததும் மீனைப் போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து பின் இறக்கவும். இதோ இப்போது சுவையான மணம் மிக்க அயிரை மீன் குழம்பு ரெடி.

மேலும் படிக்க... நாவூறும் அயிரை மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் செஞ்சுபாருங்கள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Fish, Food