பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் சிக்கன் கடைகள், சிக்கன் பகோடா, சிக்கன் பிரியாணி கடைகள் குவிந்துள்ளன. ஸ்டாட்டர்சில் தொடங்கி மெயின் கோர்ஸ் வரை அனைத்துமே சிக்கனிற்குத்தான் முன்னுரிமை. பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும் பக்கவிளைவுகளையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
கொழுப்பு உணவு : சரியான முறையில் சிக்கனை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே அதை நீங்கள் எப்படி உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நன்மை தீமை இருக்கிறது. நீங்கள் வறுத்த சிக்கனை வழக்கமாக சாப்பிடுபவர் எனில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளை இறைச்சி சிவப்பு இறைச்சியைப் போலவே கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, வேகவைத்த, சுடப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கனை உட்கொள்வது சிறந்தது.
சூட்டை கிளப்பும் : சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாக கருதப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்கும். அப்படி உடல் சூட்டை வெளியிடுவதாக உணர்ந்தால் சில நாட்கள் சிக்கனை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.
எடையை அதிகரிக்கும் : சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் மற்றும் பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்
சிக்கனின் சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI தொற்றை உண்டாக்கலாம். அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜியின் ஜர்னல் எம்பியோவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஈ.கோலின் பாக்டீரியா சிக்கனில் அதிகமாக இருக்கும். அவ்வாறு சாப்பிடும் சிக்கன் ஈ.கோலினால் அதிகம் பரவியிருந்தால் அது சிறுநீர் பாதை தொற்று, UTI தொற்றை உண்டாக்கலாம்.
சயின்ஸ் டெய்லி படி, இந்த குழு 2,452 இறைச்சி மாதிரிகளில் கிட்டத்தட்ட 80% மற்றும் 72% சிறுநீர் தொற்று, UTI தொற்றை உருவாக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதை பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் கண்டறிந்துள்ளனர். இத்தகைய தொற்றுநோய்களைத் தடுக்க, "நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) இல்லாமல் வளர்க்கப்படும்" கோழியாக பார்த்து வாங்கி உட்கொள்வது சிறந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken, Side effects