குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும் இந்த உணவுகளை கொடுக்காதீர்கள்..!

வயிற்று மந்தம், வயிறு இறுகுதல், வாந்தி, தொடர் அழுகை என அடிக்கடி உங்கள் குழந்தை பாதிக்கப்படுகிறதெனில் நீங்கள் கொடுக்கும் உணவிலும் பிரச்னை இருக்கலாம்.

news18
Updated: September 6, 2019, 4:02 PM IST
குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும் இந்த உணவுகளை கொடுக்காதீர்கள்..!
குழந்தை
news18
Updated: September 6, 2019, 4:02 PM IST
குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை வந்துவிட்டால் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். வயிறு மந்தமாக இருக்கும். இறுக்கமாக இருக்கும். சரியாக சாப்பிடமாட்டார்கள். குழந்தைக்கு என்னவாக இருக்கும் என பயந்து பதறும் தாய்மார்களே அது குழந்தைக்கு வாயுத் தொல்லையாகவும் இருக்கலாம். இந்த தொல்லையால் அடிக்கடி உங்கள் குழந்தை பாதிக்கப்படுகிறதெனில் நீங்கள் கொடுக்கும் உணவில்தான் பிரச்னை. எனவே வாயுத் தொல்லையைத் தரும் இந்த உணவுகளை தராதீர்கள்.

காய்கறிகள் : காய்கறிகளில் பீன்ஸ், புரக்கோலி, காலிஃப்ளவர், வெங்காயம், உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி , கேரட் போன்ற காய்கறிகளை அதிகமாக தருவதையோ, அடிக்கடித் தருவதையோ தவிருங்கள்.

பழங்கள் : சிட்ரஸ் பழங்கள். வாழைப்பழம், ப்ளம் பழம் , பீச் பழம், பேரிக்காய் போன்ற பழங்களை தவிருங்கள்.
பால் பொருட்கள் : பால், சீஸ், ஐஸ் க்ரீம், பதப்படுத்தபட்ட பால் பொருட்கள் போன்ற உணவுகளை தவிருங்கள்.

தானிய வகைகள் : பருப்பு வகைகள், ஓட்ஸ், கோதுமை, பார்லி , ஆழி விதைகள் என தானியங்கள் , மற்றும் பருப்பு வகைகளை அதிகமாகக் கொடுப்பதைத் தவிருங்கள்.

Loading...

ஸ்நாக்ஸ் : ஸ்நாக்ஸ் வாங்கித் தரும்முன் சர்க்கரை கலப்படமில்லாததாக வாங்கி தாருங்கள். சூரிய காந்தி விதைகள் , கசகசா என நட்ஸ் , விதைகள் கலப்படமில்லாத ஸ்நாக்ஸுகளை வாங்கித் தாருங்கள்.

பானங்கள் : சோடா, கார்பனேட் கலந்த பானங்கள், சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள் தருவதையும் தவிருங்கள்.

பார்க்க :

திருமணமான பெண்கள் தங்கள் உடல் நலனை எப்படி பராமரிக்க வேண்டும்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...