Home /News /lifestyle /

அடிக்கடி சிறுநீர் வருகிறதா..? சங்கடத்தை தவிர்க்க இந்த உணவுகளை தவிருங்கள்

அடிக்கடி சிறுநீர் வருகிறதா..? சங்கடத்தை தவிர்க்க இந்த உணவுகளை தவிருங்கள்

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது மற்ற ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது மற்ற ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது

”இந்த பிரச்னையை போதுமானவரை சாப்பிடும் உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்”

    சிலருக்கு எந்த அறிகுறியுமே இல்லாமல் திடீரென சிறுநீர் முட்டிக்கொண்டு வரும். இது சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதாவது அலுவலக மீட்டிங், வெளியே செல்லும்போது இப்படி முக்கிய பொது இடங்களில் அறிகுறியே இல்லாமல் திடீரென சிறுநீர் வந்தால் எப்படி சமாளிக்க முடியும்..?

    அதேபோல் தூங்கும்போதும் இந்த பிரச்னை வரும். அதனால்தான் வளர்ந்தபிறகும் சிலர் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இந்த பிரச்னையை போதுமான வரை சாப்பிடும் உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். எப்படி என்று பார்க்கலாம்.

    காரமான உணவு : அதிக காரமான உணவுகள் சிறுநீர்பை பிரச்னையை மேலும் அதிகமாக்கும். எனவே தவிருங்கள்.

    காஃபி : அளவுக்கு அதிகமாக காஃபி குடிப்பதும் இந்த பிரச்னைகான முக்கிய காரணம். எனவே தவிர்த்தல் நல்லது.



    சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பான சிட்ரஸ் பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளாதது நல்லது.

    செயற்கை சர்க்கரை :  இனிப்புச் சுவை அளிக்க செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது நல்லது.

    படிக்க: பெண்களே உடலுறவுக்குப் பின் இந்த விஷயங்களை செய்யத் தவறாதீர்கள்..!

    என்னென உணவுகள் இந்த பிரச்னைக்கு சிறந்தது..?

    இந்த பிரச்னையை சரிசெய்ய பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் , ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த வெள்ளரிக்காய் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...

    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Bladder, Kidney Disease, Urine

    அடுத்த செய்தி