முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அவியலை இனி இப்படி செஞ்சு கொடுங்க...!

அவியலை இனி இப்படி செஞ்சு கொடுங்க...!

அவியல்

அவியல்

Aviyal recipe | சுவையான சத்துகள் நிறைந்த அவியல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுவாக அவியல் என்றாலே பலவிதமான காய்கறிகள் கலந்து செய்யப்படும். அதனால் இது உடலுக்கு மிகவும் நல்லது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய இந்த அவியலை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்...

தேவையான பொருள்கள்

முருங்கைக்காய் - 8 துண்டுகள்

வாழைக்காய் - 1

உருளைக்கிழங்கு - 1

கேரட் - 1

மாங்காய் - 1/2

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிது

அரைக்க

தேங்காய்த் துருவல் - 8 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 6

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 2 டீஸ்பூன்

செய்முறை

1. காய் அனைத்தையும் நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து வேக விடவும். 10 நிமிடம் கழித்து அல்லது காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

2. பின் அரைக்கக் கொடுத்தவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்.

3. பின்னர் வேக வைத்த காய்களை சேர்த்து கட்டியானதும் இறக்கி விடவும். இறக்கிய பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறி விடவும். இப்போது சுவையான அவியல் ரெடி.

குறிப்புகள்

1. மாங்காய்க்குப் பதிலாக சிறிது புளியை ஊற வைத்து கரைத்து அதை சேர்த்துக் கொள்ளலாம்.

2. எண்ணெய், கருவேப்பில்லையுடன் 4 மேஜைக்கரண்டி தயிரை சேர்த்து கிளறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

First published:

Tags: Food, Vegetable