முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெருங்காயத்திற்கு இப்படியொரு வரலாறா..? கூடவே அது தரும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

பெருங்காயத்திற்கு இப்படியொரு வரலாறா..? கூடவே அது தரும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அமெரிக்கர்கள் பெருங்காயத்தை சாத்தானின் சாணம் என கேலி செய்து வெறுத்தார்கள். ஆனால் அதே அமெரிக்கர்களுக்கு பெருங்காயம் அருமருந்தாக தேவைப்பட்ட காலம் வந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உணவில் சுவைக்காக சேர்க்கப்டும் பெருங்காயம் நம் உடலுக்கு எத்தனையோ மருத்துவ நன்மைகளை செய்து வருகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெருங்காயம் நம் உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது. அதன் நன்மைகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்..

பெருங்காயம் அப்போதைய பெர்சியா தற்போதைய ஈரானை பிறப்பிடமாக கொண்டது.

விரும்பத்தகாத நாற்றத்தை கொண்டிருப்பதால் அமெரிக்கர்கள் பெருங்காயத்தை சாத்தானின் சாணம் என கேலி செய்து வெறுத்தார்கள். ஆனால் அதே அமெரிக்கர்களுக்கு பெருங்காயம் அருமருந்தாக தேவைப்பட்ட காலம் வந்த போது, கடவுளின் அமிர்தம் எனப் பெயரிட்டு தாயத்து போல தங்கள் கழுத்துகளில் தொங்கவிட்டு அலைந்தார்கள். ஆம்… அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது பெருங்காயம்.

நமக்கு பழக்கமான பன்றிக் காயச்சலைப்போ 1910 களில் அமெரிக்காவில் ஸ்பானிஷ் ஃப்ளு என்கிற காய்ச்சல் பரவி கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்தார்கள். அந்த நோய்க்கு பெருங்காயம் அருமருந்தாக பயன்பட்டது. அதனால் அமெரிக்கர்கள் பெருங்காயத்தை கொண்டாடி தீர்த்தார்கள். இந்திய உணவுகளிலும் பெருங்காயம் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது.

Read More : பரு, கரும்புள்ளி என அனைத்தையும் போக்கும் கற்றாழை..! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

உணவின் சுவைக்கும் மட்டுமல்ல பல்வேறு நன்மைகளை செய்கிறது பெருங்காயம் . அவற்றின் பயன் மற்றும் சாப்பிடும் முறையை பார்க்கலாம்..

உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெருங்காயம் வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு உடல் சூட்டையும் தணித்து குளிர்விக்கிறது.
தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள்.
தினமும் பெருங்காயத்தை பயன்படுத்தனால் நம் உடலில் கால்சியம் கூடும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் நம் உடலுக்கு கிடைக்கும்.
பெண்களுக்கு இது சிறந்த மருந்து. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும்.
மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வது  நல்லது. 
குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும்.
குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து லோசியோ என்ற ஒருவகையான திரவம் வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 
அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. அசைவம் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்து உப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.
நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும்.
குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.
இப்படி பல வகை மருத்துவக் குணம் கொண்ட பெருங்காயம் அதன் மணத்தால் பலராலும் வெறுக்கப்படுகிறது. தோற்றத்தால்  யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை  தான் பெருங்காயயம் நமக்கு சொல்லித்தரும் தலையாய பாடம்
First published:

Tags: Asafoetida, Health Benefits