முன்னர் இருந்த மக்களின் உணவு பழக்கத்தை ஒப்பிடும்போது இன்றைய மக்களின் உணவு பழக்கம் என்பது முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. பாஸ்ட் புட் கலாச்சாரம் தொடங்கியதில் இருந்து அதற்காக தயாரிக்கப்படும் ரசாயன பொருட்களால் நோய்களும் வேகமாகவே வந்துவிடுகிறது.அப்படியான ஒரு ராசனம் பற்றியே இப்போது பார்க்க இருக்கிறோம்.
சாதாரண கரும்பு சக்கரையில் சுக்ரோஸ் சத்து அதிகம் இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இதற்கு பதிலாக செயற்கை சர்க்கரை பரிந்துரைப்பர். கரும்பு சர்க்கரையை விட 200 மடங்கு அதிகம் இனிக்கும் தன்மை இந்த ரசாயனத்தின் இருக்கும். அதேநேரம் சுக்ரோஸ் குறைவான அளவு இருக்கும்.
அஸ்பார்டேம் என்ற ரசாயனத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 1981 இல் இனிப்பு சுவையூட்டியாக பயன்படுத்த அங்கீகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மனிதன் இதை உட்கொள்ளும் போது, அஸ்பார்டேம் அஸ்பார்டிக் அமிலம், ஃபைனிலாலனைன் மற்றும் மெத்தனால் ஆக மாறுகிறது.
இதையும் படிங்க: புனேவில் பரவும் ஜப்பானிய மூளை காய்ச்சல் பற்றி தெரியுமா..? அறிகுறிகளும்... காரணங்களும்...
இவை அனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.
புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்களால் சுமார் 5,000 உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள அஸ்பார்டேம் எலிகளில் பதற்றம், கவலை போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்கள் உட்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட அதிகப்பட்ச அஸ்பார்டேம் அளவை தண்ணீரில் கலக்கி 4 வருடங்களாக எலிகளுக்கு கொடுத்து செய்த ஆய்வில் அசாதாரண பதற்றம் உணரப்பட்டுள்ளன. இதிலும் பெண் எலிகளை விட ஆண் எலிகளின் மூலம் அடுத்த சந்ததியருக்கும் இந்த அசாதாரண பதற்ற உணர்வு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஊதாத் திருவிழா நடைபெற இருக்கிறது.. எங்கு தெரியுமா?
மேலும் அஸ்பார்டேமை உட்கொண்ட எலிகளில் பதட்டத்தை உருவாக்குவதோடு, இனிப்பு உட்கொள்ளும் ஆண்களிடமிருந்து இரண்டு தலைமுறைகளுக்கு இந்த பாதிப்பு கடத்தப்படுவது தெரிந்தது. எலிகளின் விந்தணுக்களில் தற்காலிக அல்லது எபிஜெனெடிக் மாற்றங்களைக் காட்டியது.
மரபணு மாற்றங்கள் (பிறழ்வுகள்) போலல்லாமல், எபிஜெனெடிக் மாற்றங்கள் என்பது மீளக்கூடியவை மற்றும் டிஎன்ஏ வரிசையை மாற்றாது. இருப்பினும், டிஎன்ஏ வரிசையை உடல் எவ்வாறு படிக்கிறது என்பதை இந்த எபிஜெனெடிக் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றம் இந்த தலைமுறையோடு நில்லாமல் 2 தலைமுறைக்கு அது கடந்து செல்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
பதற்றம் என்பது பொதுவானது தான். ஆனால் இந்த ரசாயனத்தால் சாதாரணமாக மனிதர்கள் இருக்கும் அளவை விட பல மடங்கு அதிக பதற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.