ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்கு சூடா மெதுவடை சாப்பிடலைனா எப்படி..? உளுந்து ஊற வைக்காம இப்போவே செஞ்சு சாப்பிட டிப்ஸ்..!

மழைக்கு சூடா மெதுவடை சாப்பிடலைனா எப்படி..? உளுந்து ஊற வைக்காம இப்போவே செஞ்சு சாப்பிட டிப்ஸ்..!

அரிசி மாவு வடை

அரிசி மாவு வடை

வடையை மழை நேரத்துல சட்னியோட சாப்பிடறப்போ சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கு. சிம்பிளா 10 நிமிஷத்துல செஞ்சி சாப்பிடக்கூடிய அரிசி வடை பற்றி தான் இந்த பதிவுல சொல்லியிருக்கோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வடை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, பருப்பு வடை, கீரை வடை, உளுந்து வடை, மசாலா வடை இப்படி வடைக்கான வகைகளை அடுக்கிக்கிட்டே போகலாம். வடை வந்து ஆல் டைம் ஸ்நாக்ஸ் அப்படினே சொல்லலாம்.

  காலை, மாலை, இரவுனு எல்லா சாப்பாடுலையும் வடை இருந்தாலும் அதை அழுக்காம சப்பிடலாம். அப்படிப்பட்ட வடையை மழை நேரத்துல சட்னியோட சாப்பிடறப்போ சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கு. சிம்பிளா 10 நிமிஷத்துல செஞ்சி சாப்பிடக்கூடிய அரிசி வடை பற்றி தான் இந்த பதிவுல சொல்லியிருக்கோம்.

  அரிசி வடை

  தேவையான பொருட்கள்

  • அரை கப் அரிசி மாவு
  • அரை கப் கெட்டியான தயிர்
  • ஒரு கப் அரிசி மாவிற்கு இரண்டு கப் மோர்
  • வடையின் நிறத்திற்காக இரண்டு ஸ்பூன் கடலை மாவு
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது.
  • ஒரு டீஸ்பூன் நெய்
  • சின்ன துண்டு இஞ்சி
  • கருவேப்பிலை இலை
  • பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப

  செய்முறை

  முதலில் வடை மாவு தயாரிக்கும் முறை.எடுத்து வைத்துள்ள தயிர், மோருடன், அரிசி மாவு கடலை மாவை நன்றாக கலக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அதனை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறவும்.

  மாவு இருக இருக பாத்திரத்தில் ஒட்டத வண்ணாம் திரண்டு வரும்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு அதில் (வெங்காயம்,இஞ்சி,நெய்,கருவேப்பிலை,பச்சைமிளகாய்) ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

  Also Read : டீயுடன் சூடா வெங்காய பக்கோடா சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? உடனே செய்ய ரெசிபி...

  பின்னர் வானொலியில் எண்ணெய் ஊற்றி மாவினை வட்டமாக கையில் தட்டி நடுவில் ஓட்டை விட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.  நடுநிலையான சூட்டில் ரொம்ப கருகவும் விட்டு விடாமல் சிறிது மொறுவவிட்டு வடையை வெளியில் எடுக்கவும்.

  இதனோடு வேர்க்கடலை சட்னி அரைத்து வைத்து பரிமாறினால் நீங்க தான் ஆகச்சிறந்த கிட்சன் கிங்

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Evening Snacks, Food, Heavy rain, Snacks