ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அரிசி மாவு செய்யும் அற்புதம்..! உணவுகளை மொறுமொறுப்பாக்குவது முதல் முக பொலிவை கூட்டுவது வரை.!

அரிசி மாவு செய்யும் அற்புதம்..! உணவுகளை மொறுமொறுப்பாக்குவது முதல் முக பொலிவை கூட்டுவது வரை.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஃப்ரை செய்யப்படும் ஸ்னாக்ஸ் அல்லது உணவுகள் எளிதில் அதன் மொறுமொறுப்பு தன்மையை இழக்க கூடாது என்று நினைத்தால் 2-3 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் போதும். பல மணிநேரங்களுக்கு நமத்து போகாமல் உணவுகள் கிரிஸ்ப்பியாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் இந்திய சமையலறைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது அரிசி மாவு. பல உள்ளூர் சமையல் டிஷ்களில் அரிசி மாவு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவுவாக இருக்கிறது. அரிசி நன்றாக தூளாக அரைக்கப்பட்டு அரிசி மாவு தயாரிக்கப்படுகிறது. வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி இரண்டுமே அரிசி மாவுகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரிசி மாவை கொண்டு பலவகை உணவுகள் செய்யப்படுகிறது.

கொழுக்கட்டை முதல் இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு, சீடை, தட்டை போன்ற நொறுக்கு தீனிகள் கூட அரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான ஒன்றாக இருக்கிறது அரிசி மாவு. அரிசி மாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் பழுப்பு அரிசி மாவில் அதிக அளவு பி வைட்டமின்கள் உள்ளன.

Read More : குளிர்கால பிரச்னைகளை தவிர்க்க உதவும் டிரை ஃப்ரூட்ஸ்..!

அரிசி மாவை எப்படி சேமித்து வைக்கலாம்.?

அரிசி மாவில் எளிதில் பூச்சி வைக்கும் என்பதால் காற்று புகாத, சுத்தமான, உலர்ந்த கன்டெயினரில் சேமித்து வைக்க வேண்டும். உணவுகளின் சுவையை கூட்ட அல்லது தேவையான பதத்தில் தயாரிக்க அரிசி மாவை எவ்வாறு பயன்படுத்தலாம், உணவுகளை தவிர வேறு எதற்காக அரிசி மாவை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். அரிசி மாவு மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கும் என்றாலும் வீட்டில் இருக்கும் அரிசியை கழுவி அதை காய வைத்து நன்கு பவுடராக அரைப்பதன் மூலம் அரிசி மாவை தயார் செய்து கொள்ளலாம்.

ஃப்ரை செய்யப்படும் ஸ்னாக்ஸ்களை மொறுமொறுவென்று வைக்க:

ஃப்ரை செய்யப்படும் ஸ்னாக்ஸ் அல்லது உணவுகள் எளிதில் அதன் மொறுமொறுப்பு தன்மையை இழக்க கூடாது என்று நினைத்தால் 2-3 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் போதும். பல மணிநேரங்களுக்கு நமத்து போகாமல் உணவுகள் கிரிஸ்ப்பியாக இருக்கும்.
அரசி மாவு லட்டு: 1 கப் அரிசி மாவை வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவும். பின் அதில் 1/2 கப் வறுத்த தேங்காய் பவுடர், 1 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர், 4 டீஸ்பூன் நெய் மற்றும் 1 கப் வெல்லப்பாகு சேர்த்து லட்டு செய்யலாம்.
பாலை கெட்டியாக்க : கெட்டியான பால் தேவைப்படும் டிஷ்களை தயார் செய்யும் போது கொதிக்கும் பாலில் 2-3 டீஸ்பூன் அரிசி மாவை சேர்ப்பது பாலை கெட்டியாக்க செய்கிறது.
சரும அழகிற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.! உணவுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல பலன்களை வழங்குகிறது அரிசி மாவு. இது ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. ஹோம்மேட் ஃபேஸ் பேக்ஸ் அல்லது ஸ்க்ரப்ஸ்களில் அரிசி மாவை கலந்து பயன்படுத்துவது பொலிவை கூட்டுகிறது. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், அரிசி மாவு, தேன் மற்றும் பால் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து ஒரு ஸ்க்ரப்-ஆக முகத்தில் அப்ளை செய்வது எதிர்பார்க்கும் நன்மைகளை பெற உதவுகிறது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food, Food recipes, Food Spices