Home /News /lifestyle /

பதப்படுத்தி வறுக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவரா..? உங்களுக்கான எச்சரிக்கை..!

பதப்படுத்தி வறுக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவரா..? உங்களுக்கான எச்சரிக்கை..!

பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ்

பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ்

சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கக் கூடிய பிரைடு ஸ்நாக்ஸ் இல்லாமல் நமது கொண்டாட்ட நேரங்களை நினைத்துப் பார்க்க முடியாது.

நல்ல கோலாகலமான பார்டிகளை கொண்டாடுவது, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வீட்டில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளில் இந்த பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ் வகைகள் கட்டாயம் இடம் பிடித்துவிடும்.

சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கக் கூடிய பிரைடு ஸ்நாக்ஸ் இல்லாமல் நமது கொண்டாட்ட நேரங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அதே சமயம், பிரைடு ஸ்நாக்ஸ் வகைகளிலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், இதை நீங்கள் தினசரி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்? இந்த கேள்விக்கான விடை இந்தச் செய்தியில் இருக்கிறது.

உருளைக் கிழங்கு பிரையில் ஊட்டச்சத்து இருக்கிறதா?

ஆம் இருக்கிறது. இந்த பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். ஆனால், மிதமான அளவில் இந்த ஸ்நாக்ஸை நீங்கள் எடுத்துக் கொண்டால் உண்மையில் உடல் நலனுக்கு நல்லதுதான். அதே சமயம், சிப்ஸ் அல்லது பிரைடு வகைகளை கடைகளில் வாங்காமல் உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து சாப்பிட்டால் நல்லது.



உருளை கிழங்குகளில் பொதுவாக குளூடென் சத்து கிடையாது. நல்ல ஸ்டார்ச் சத்து கொண்டது. உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். ஆகவே, ரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும். சாதாரணமாக ஒரு உருளைக் கிழங்கில் 110 கலோரிகள், 26 கிராம் மாவுச்சத்து, விட்டமின் பி-6 சத்து உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. அவை அனைத்தும் உடல் நலனுக்கு அவசியமானவை.

வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த 15 உணவுகளை இன்றே தவிர்த்திடுங்கள்..!

பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ் :

ஆனால், கடைகளில் பதப்படுத்தி விற்கப்படும் பிரைடு ஸ்நாக்ஸ்-களில் இதேபோன்ற சத்துகளை எதிர்பார்க்க முடியாது. அங்கு சுவைக்காக கூடுதல் மசாலா மற்றும் உப்பு போன்றவை சேர்த்திருப்பார்கள். ஆகவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பிரைடு வகைகளை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டும்.



ஏன் பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ் உடலுக்கு நல்லதல்ல?

வீட்டில் நாம் சாதாரணமாக உருளைக்கிழங்கை சீவி, கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து எளிமையாக பொறித்து எடுத்து விடுவோம். ஆனால், கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பிரைடு ஸ்நாக்ஸ்களில் குளூட்டென் நிறைந்த மாவு சேர்க்கப்பட்டிருக்கும். அவை மிகுந்த கலோரி சத்துகள் மற்றும் நிறையூட்டப்பட்ட கொழுப்பு போன்றவற்றை கொண்டிருக்கும் என்பதால், அவை உங்கள் இதய நலனுக்கு நல்லதல்ல.

குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட பிரைடு உணவு வகைகளை சாப்பிடும்போது, இதய நலனுக்கு தீங்கு விளைக்கு எல்டிஎல் வகை கொழுப்புச் சத்து அதிகரிக்கும். இதன் எதிரொலியாக ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் ஏற்படலாம். டிரான்ஸ் ஃபேட் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் மூளைக்கு ஞாபக மறதியை கொடுக்கும் அல்சைமர் நோய் ஏற்படலாம். ஆகவே, கடைகளில் விற்பக்கப்படும் பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை ஒதுக்கி விட்டு, வீடுகளில் செய்து சாப்பிட வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Processed Food

அடுத்த செய்தி