ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முளைகட்டிய பயறு உண்மையில் சூப்பர்ஃபுட்டா.? இதை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

முளைகட்டிய பயறு உண்மையில் சூப்பர்ஃபுட்டா.? இதை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

முளைகட்டிய பயறு

முளைகட்டிய பயறு

Sprouts | பயிறு வகைகளை முளைகட்டி உண்பது ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சூப்பர்ஃபுட் என்று கூறப்பட்டாலும் இது அனைவருக்கும் ஏற்ற ஒன்றா என்ற கேள்வி எழுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றன முளை கட்டிய பயிறு வகைகள். இவற்றை உட்கொள்வது காய்கறி உணவுகளை சாப்பிடுவது போன்ற சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.

ஏனென்றால் மற்ற எந்த உணவையும் விட அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதாக முளை கட்டிய பயிறுகள் மற்றும் தானியங்களில் உள்ளன. குறிப்பாக முட்டையை போல புரோட்டீன் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. தவிர் ஃபைபர் , கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.

பயிறு வகைகளை முளைகட்டி உண்பது ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சூப்பர்ஃபுட் என்று கூறப்பட்டாலும் இது அனைவருக்கும் ஏற்ற ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விளக்கமளித்துள்ள ஆயுர்வேத நிபுணர் அல்கா விஜயன், ஃபைபர் அதிகம் இருப்பதால் சிலருக்கு இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. இதனால் உப்பசம், அசிடிட்டி, மலச்சிக்கல், மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்கிறார்.

இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டில், "நவீன அறிவியல் முளைகட்டிய பயிறு வகைகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதாக கூறினாலும், ஆயுர்வேதத்தில் இவை வாதத்தை அதிகரிப்பதாக கூறப்படும். ஏனென்றால் அவை விதை மற்றும் குழந்தை தாவரம் என இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும்" என கூறியுள்ளார்.


உருமாற்றத்தின் பாதியிலேயே இருக்கும் வடிவமாக முளைக்கட்டிய பயறுகள் இருப்பதால் ஜீரணிக்க கடினமாக உள்ளது. எனவே தான் இவை சாப்பிட்டதும் சிலர் வயிறு உப்பியது போன்றும், வாயு மற்றும் மலச்சிக்கலாகவும், அசிடிட்டியாகவும் உணர்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read : “பிரவுன் சுகர் இருக்க பயமேன்”... நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

ஆயுர்வேத நிபுணரின் கருத்தை ஒப்புகொண்டுள்ள பிரபல ஊட்டச்சத்து நிபுணர் இஷ்டி சலுஜா. பச்சையான மற்றும் சமைக்காத முளைகட்டிய பயறுகள் ஆட்டோ இம்யூன் நிலைமை கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஃபுட் பாய்சனிங்-ஆக கூடும் என்று எச்சரிக்கிறார். தவிர இவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்து மிக அதிகம் என்பதால் பலவீனமான சிறுநீரகங்களைக் கொண்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்.

ஜீரண சக்தி குறைவாக கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வயிற்று வலி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலால் அவதிப்பட நேரிடும் என்று ஆயுர்வேத நிபுணரை போலவே எச்சரிக்கிறார். அதே போல மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைகட்டிய பயறு மற்றும் தானியங்களை எடுத்து கொள்ள கூடாது மீறினால் அறிகுறிகள் மோசமாகும் என்கிறார்.

Also Read : நட்சத்திர பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன் கிடைக்குமா..? இனி இதை தேடிப்பிடித்து சாப்பிடுவீர்கள்.!

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

ஆயுர்வேத நிபுணரின் கூற்றுப்படி மோசமான செரிமானம் அல்லது தடைபட்ட அக்னி, அல்லது வாதம் அல்லது பித்தம் பிரகிருதி கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை தவிர்க்க வேண்டும். கபா பிரகிருதி உள்ளவர்கள் இவற்றை வாரம் இருமுறைக்கு மேல் சாப்பிட கூடாது. நல்ல செரிமான சக்தி கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க இவற்றை உட்கொள்ளலாம். முளைகட்டிய தானியங்களை காலையில் உட்கொள்வது நல்லது. எளிதில் ஜீரணிக்க எண்ணெய், உப்பு, சீரகம், பூண்டு சேர்த்து சமைக்கலாம் என்கிறார்.

தினசரி சாப்பிட்டால் தீமையா?

உப்பசம், வாயு, அசிடிட்டி, செரிமானத்தில் தாமதம் உள்ளிட்டவற்றை தவிர தொடர்ந்து முளைகட்டிய பயறு மற்றும் தானியங்களை சாப்பிடுவது குடலில் அமைந்துள்ள வாத தோஷத்தின் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் இது மூல நோய்க்கு வழிவகுக்கும் என்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Healthy Food, Healthy Lifestyle, Sprouts