ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தா? உண்மை என்ன..?

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தா? உண்மை என்ன..?

மைக்ரோவேவ் ஓவன்

மைக்ரோவேவ் ஓவன்

மைக்ரோவேவில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்று நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் பெண்களின் உற்ற தோழனாக இருக்கின்றன மைக்ரோவேவ் ஓவன்கள். உணவுகளை எளிதாக மற்றும் விரைவாக சமைப்பதற்கு மட்டுமின்றி அவற்றை சூடாக்கி சாப்பிடவும் மைக்ரோவேவ் ஓவன்கள் நமக்கு உதவுகின்றன.

முன்பு வெகு சிலரது வீட்டில் மட்டுமே காணப்பட்ட மைக்ரோவேவ் தற்போது பெரும்பாலான வீட்டின் கிச்சனில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான சாதனமாக இருந்து வருகிறது. இதனிடையே மைக்ரோவேவ் ஓவனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் (மின்காந்த அலைகள்) கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணிகள் எவ்வித கதிர் வீச்சிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில், மேற்காணும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதை இங்கே பார்க்கலாம்...

மைக்ரோவேவ் ஓவன்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா.?

மைக்ரோவேவில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்று நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. கதிர்வீச்சு கண்ணுக்கு தெரியாதது மற்றும் இது ஏற்படுத்தும் விளைவுகளை சட்டென்று புரிந்து கொள்ளவும் முடியாது. நம்புவது கடினம் தான், ஆனால் எந்தெந்த சந்தர்ப்பங்களில் மைக்ரோவேவ் பிறக்காத குழந்தைகளை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

குறிப்பாக சாதனம் பழையதாகவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படும் போதோ கருவிலிருக்கும் குழந்தைக்கு மைக்ரோவேவ் தீங்கு விளைவிக்கும். பயன்படுத்தும் மைக்ரோவேவில் ஒருவேளை கசிவுகள் இருந்தால் அவற்றில் இருந்து வெளிப்படும் சிறிதளவு எலெக்ட்ரோமேக்னட்டிக் வேவ்ஸ் கூட கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓவன் மிகவும் பழயதாக இருக்கும் போதோ அல்லது அதன் டோர் சரியாக லாக் செய்யாத போதோ அல்லது ஏதேனும் பாகங்கள் உடைந்திருக்கும் போதோ கதிர்வீச்சு கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மன அழுத்தம் அதிகமானால் தொப்பையும் பெரிதாகுமா..? அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மைக்ரோவேவ் சாதனத்திலிருந்து கசியும் கதிர்வீச்சு அலைகள் சுமார் 12 சென்டிமீட்டர் வரை பயணிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள் கதிர்வீச்சு கசியும் ஓவனை பயன்படுத்துவது எப்போதுமே தீங்கு விளைவிக்கும். அதே நேரம் மைக்ரோவேவ் ஓவன் லீக்கேஜ் ஏதுமின்றி சரியான கண்டிஷனில் இருக்கும் போது பயன்படுத்துவது கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காது.

மைக்ரோவேவ் ரேடியேஷன்கள் வாசனையற்றவை மற்றும் கண்டறிவது கடினம். மைக்ரோவேவின் டோர் சேதமடைந்திருந்தாலோ அல்லது திறந்திருந்தாலோ கசியும் வாய்ப்பு அதிகம். சாதனம் கதிர்வீச்சை கசிய விடும் வாய்ப்புகள் இருந்தால் உடனே ஓவனை மாற்றி விடுவது நல்லது.

மைக்ரோவேவ் ஓவனை முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்துவது எப்படி.?

- BIS அங்கீகாரம் அல்லது ISI முத்திரையுடன் கூடிய மைக்ரோவேவ் ஓவன்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தவும்.

- மைக்ரோவேவ் ஓவனில் கசிவுகளைக் கண்டறிவது கடினம். எனவே மைக்ரோவேவ் வாங்கி பல ஆண்டுகள் ஆகி இருந்தால் கசிவுக்கான வாய்ப்புகள் அதிகம். அதில் சமைப்பது அல்லது பேக்கிங் செய்வதை தவிர்க்கவும்.

- பழைய பிளாஸ்டிக் கன்டெயினர்ஸ் அல்லது கீறல்கள் உள்ள மைக்ரோவேவ் கன்டெயினர்களில் சமைப்பது அல்லது பேக்கிங் செய்வதை தவிர்க்கவும்.

ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்...

- ஓவனில் சமைக்கும் டிஷ்-ஐ உள்ளே வைத்து வெப்பநிலை மற்றும் டைமரை செட் செய்வது நல்லது. ஓவன் பயன்படுத்தப்படும் போது டிஷ் குக்காகும் வரை சிறிது தூரம் தள்ளி நிற்பதும் நல்லது. இப்பழக்கம் எலெக்ட்ரோமேக்னட்டிக் ரேடியேஷன்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க உதவும்.

- மைக்ரோவேவ் ஓவனின் டோர் சரியாக லாக் ஆகாவிட்டால் அதை முடிந்த வரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய கேடு ஏற்படாமல் இருக்க பழுதை சரி செய்து கொள்ளுங்கள் அல்லது ஓவனை மாற்றி விடுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Microwave, Pregnancy care