Benefits of eating almond : பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பாதாம் பருப்பை உலகெங்கிலும் உள்ள மக்கள் பல நூறு ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். நீங்கள் தினசரி எடுத்து கொள்ளும் ஒரு சில பாதாம்கள் உங்களை ஆற்றல் மிக்கவராக மாற்றும்.
அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாதாம்களை நாளொன்றுக்கு மிதமான அளவு சாப்பிடுவது சிறந்த இதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள பாதாமை காலை நேரத்தில் எடுத்து கொள்வது உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பலவற்றை வழங்குகிறது.
ஆயுர்வேத நிபுணர்கள் முதல் ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை பாதாம் பருப்பை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் பாதாம்களை ஒருநாளைக்கு ஒருகைப்பிடி சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. தினசரி தவறாமல் பாதம் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு ஷார்ட்-செயின் ஃபேட்டி ஆசிட்டான ப்யூட்ரேட்-ன் (Butyrate) உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கிறது. குடல் நுண்ணுயிர்கள் மனித ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான வழிமுறைகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன, ஆனால் ஆதாரங்கள் குறிப்பிட்ட வகை உணவை உட்கொள்வது நமது குடலில் உள்ள பாக்டீரியா வகைகளை பாதிக்கலாம் அல்லது அவை நம் குடலில் என்ன செய்கின்றன என்பதைக் கூறுகின்றன.
ஆய்வு:
லண்டனின் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, குடல் நுண்ணுயிரிகளின் கலவையில் பாதாம் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷியன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஆய்வு, குடல் நுண்ணுயிரிகள் பாதாம் பருப்பை எவ்வாறு உடைத்து ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன என்பதை பற்றியும் ஆராய்ந்தது. குடல் நுண்ணுயிர் என்பவை குடலில் வாழும் ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை கொண்டது. இவை நாம் உணவுகள் மூலம் பெரும் ஊட்டச்சத்துக்களை ஜீரணிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர நமது செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகள் உட்பட நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்காக 18 முதல் 45 வயதுடைய 87 பேரை பங்கேற்க செய்தனர். இந்த 87 பேரை மொத்தம் 3 குழுக்களாக பிரித்து ஆய்வுக்குட்படுத்தினர். இதில் முதல் குழுவிற்கு நாளொன்றுக்கு 56 கிராம் முழு பாதாம் (whole almond) பருப்பு, இரண்டாவது குழுவிற்கு நாளொன்றுக்கு 56 கிராம் கிரவுண்ட் பாதாம் (ground almond), மூன்றாவது குழுவிற்கு எனர்ஜி-மேட்ச்டு ஸ்னாக்கான மஃபின்ஸ் கொடுக்கப்பட்டது. சுமார் 4 வாரங்களுக்கு இந்த ஆய்வு நீடித்தது.
முடிவு என்ன?
ஆய்வின் முடிவில் ஸ்னாக்ஸாக மஃபின்ஸ் எடுத்து கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது பாதாம் சாப்பிட்டவர்களிடையே பெருங்குடலில் உள்ள செல்களுக்கு எரிபொருளின் முக்கிய ஆதாரமாக இருக்கும் ப்யூட்ரேட் உற்பத்தி கணிசமாக அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த செல்கள் திறம்பட செயல்படும் போது குடல் நுண்ணுயிரிகள் செழிப்பாக வளர உதவுகின்றன. அதே போல முழு பாதாம் பருப்புகளுடன் ஒப்பிடுகையில், கிரவுண்ட் பாதாம் கணிசமாக சிறிய PSD மற்றும் அதிக கணிக்கப்பட்ட லிப்பிட் வெளியீட்டை காட்டியது.
Also Read : இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Almond, Gut Health, Heart health