Home /News /lifestyle /

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

ஐயப்பனுக்கு படைக்க இந்த அரவணப் பாயாசத்தைதான் முதலில் செய்வார்கள்.இந்த பாயாசம் கேரளாவில் உள்ள அனைத்து கோவிகளிலும் பிரசாதமாகா வழங்கப்படுவது வழக்கம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்த அரவணப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள் 

புழுங்கலரிசி - 200 கிராம்

வெல்லம் - 1 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - 250 மில்லி

ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

பின்னர் அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும். இப்போது சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.

மேலும் படிக்க... திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!      

திருக்கார்த்திகைக்கு கடலை உருண்டை செய்யலாம்...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Payasam, Sabarimalai Ayyappan temple, Sweet recipes

அடுத்த செய்தி