• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கணவரின் ஆசையை நிறைவேற்றிய விஜய் டிவி நிஷா!

கணவரின் ஆசையை நிறைவேற்றிய விஜய் டிவி நிஷா!

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் லாக்டவுனில் நடந்தது

  • Share this:
    விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, அவரின் கணவர் ரியாஸ் ஆசைக்காக செய்த அறந்தாங்கி ஸ்பெஷல் மட்டன் சுக்கா ரெசிபி தான் இன்றைய ஸ்பெஷல்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று முக்கியமான விஜய் டிவி பிரபலமாக மாறியிருக்கும் அறந்தாங்கி நிஷா காமெடி செய்து பார்த்து இருப்போம், அழுது பார்த்து இருப்போம் ஏன் சண்டை போட்டு கூட பார்த்து இருப்போம். ஆனால் அவர் சமைப்பது என்பது அரிதான விஷயம். அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் லாக்டவுனில் நடந்தது. தனது கணவர் ரியாஸ் ஆசைப்பட்டு கேட்ட, மட்டன் சுக்காவை நிஷா தனது கையாலே செய்து கொடுத்தார். அந்த மட்டன் சுக்கா ரெசியின் செய்முறை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

    பெரும்பாலும் மட்டன் சுக்காவில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள், தனியா தூள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நிஷா செய்த இந்த மட்டன் சுக்காவின் ஸ்பெஷலே இது தான். வெறும் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு இவற்றை வைத்தே அட்டகாசமான காரசாரமான மட்டன் சுக்காவை செய்து அசத்தி இருக்கிறார். முதலில் அதற்கு தேவையான பொருட்களை பார்த்து கொள்வோம். மட்டன், வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, எண்ணெய், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய். இவற்றை வைத்து தான் மட்டன் சுக்கா செய்யபோகிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலில் குக்கரின் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து 6 விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதில் சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தின் அளவு தான் அதிகமாக இருக்க வேண்டும்.



    பின்பு இதில் காரத்திற்கு தேவையான காய்ந்த மிளகாய் சேர்த்து அதில் வேக வைத்துள்ள மட்டனை தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். தேவையான் அளவு உப்பும் சேர்க்க வேண்டும். மட்டன் நன்கு சுக்கா போல் வந்ததும் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வ்றுத்து அரைத்த பொடியை சேர்க்க வேண்டும். இதுதான் இந்த ரெசியின் முக்கியமான தருணம். இந்த பொடியை தூவி 10 நிமிடம் வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா ரெடி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: